ஹாசிப் யாஸீன்-
நற்பிட்டிமுனை ஜூம்ஆப் பள்ளிவாசலின் அலுவலகத்திற்கு கணனி தொகுதியை கொள்வனவு செய்யும் பொருட்டு மெஸ்றோ அமைப்பு ஒரு இலட்சம் ரூபா பணத்தை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
நற்பிட்டிமுனை ஜூம்ஆப் பள்ளிவாசலிற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட நிருவாக குழுவினர் மெஸ்றோ அமைப்பிடம் விடுத்த வேண்டுகோளையடுத்தே இந்நிதி வழங்கப்பட்டுள்ளது.
நற்பிட்டிமுனை அனைத்து பள்ளிவாசல் சம்மேளன தலைவரும். அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி விரிவுரையாளருமான மௌலவி ஏ.எஸ்.நாஸிர்கனி தலைமையில் இடம்பெற்ற இந்நிதி வழங்கும் நிகழ்வில் மெஸ்றோ அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும். திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்,மெஸ்றோ அமைப்பின் பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.நஸீல், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.அன்சில், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் யூ.எல்.தௌபீக், பள்ளிவாசல் செயலாளர் ஏ.எஸ்.எம்.ஜௌபர் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளரும், மெஸ்றோ அமைப்பின் உதவித் தலைவருமான ஷரீப் ஹக்கீம் உட்பட பள்ளிவாசல் நிருவாக சபை அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment