உருளைக்கிழங்கு இறக்குமதியை இன்று நள்ளிரவு தொடக்கம் தடை

ருளைக்கிழங்கு இறக்குமதியை இன்று நள்ளிரவு தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் தடை செய்வதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

சிறுபோகத்தின் மூலம் பெறப்பட்டுள்ள உருளைக்கிழங்கு அடுத்த வாரத்துக்குள் சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ளதால், இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கு தற்காலிக தடை விதிக்கப்படுவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் எம்.ஜி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதன் ஊடாக உள்ளூர் உருளைக்கிழங்கு செய்கையாளர்களை பாதுகாக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை சுங்கப் பிரிவிற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்புரையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் சுங்க சட்டப்பிரிவின் பணிப்பாளருமான லெஸ்லி காமினி குறிப்பிட்டுள்ளார்.N1st
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :