இலங்கை முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக ஒற்றுமைப்படுவதற்கான பரீட்சாத்தக் களம் தான் இத்தேர்தல்-அமைச்சர் ஹக்கீம்

பைஷல் இஸ்மாயில்-

வா மாகாண சபை தேர்தலை முன்னிட்டு, பதுளை மாவட்ட தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் அதி உயர்பீட உறுப்பினர்களுக்கான செயலமர்வு அண்மையில் பதுளை கிறீன் மவுன்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும், நீதி அமைச்சருமான றஊப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இச்செயமர்வின்போது, பதுளை மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகமும், தேர்தல் தொபடர்பான வேலைத் திட்டம் தயாரித்தலும் இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து அமைச்சர் றஊப் ஹக்கீம் உரையாற்றுகையில்,

இலங்கை வாழ் முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக ஒற்றுமைப்படுவதற்கான பரீட்சாத்தக் களமாக இத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இப்பரீட்சாத்த முன்னேடுப்புக்கு பதுளை மாவட்டம் போன்ற முஸ்லிம்கள் வாழும் பிரதேசமே தகுந்த களமாக உள்ளது. இத்தேர்தலில் எமது வெற்றியே முஸ்லிம்களின் அரசியல் ஒற்றுமைக்கு முதற்படியாக அமையவுள்ளது. இந்த ஒற்றுமைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எமது அரசியல் எதிரிகள் விசமக் கருத்துக்களை பரப்புரை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் பதுளை மாவட்ட உலமாக்கள், பள்ளிவாயல் தர்ம கர்த்தாக்கள், சமூகத் தலைவர்கள், வர்த்தக பிரமுகர்கள், புத்தி ஜீவிகளின் ஏகோபித்த வேண்டுகோளின் பிரகாரமே இத்தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிட முஸ்லிம் கட்சிகள் முன்வந்தமை பற்றியும் அமைச்சர் றஊப் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :