ஓட்டமாவடி மர்க்கஸ் அந்நூர் கலாபீடத்தில் மூன்று மாடிக் கட்டிடம் திறந்து வைப்பு

த.நவோஜ்-

ட்டமாவடி மர்க்கஸ் அந்நூர் கலாபீடத்தில் இரண்டு கோடி பதினைந்து லட்சம் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டிடம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

பறகஹதெனிய ஜமாத் அன்சாரி சுன்னதுல் முஹம்மதியா (துயுளுஆ) அமைப்பின் இரண்டு கோடி பதினைந்து லட்சம் ரூபா நிதியளிப்பில் அமைக்கப்பட்டுள்ள மூன்று மாடிக் கட்டிடத்தில் வகுப்பறைக் கட்டிடம், மாணவர் விடுதி, ஆராதனை மண்டபம் என்பன அமைக்கப்பட்டுள்ளன.

கலாபீடத்தின் அதிபர் மௌலவி ஏ.ஹபீப் (காசிமி) தலைமையில் இடம் பெற்ற திறப்பு விழா நிகழ்வில் கல்லூரியின் தலைவர் மௌலவி ஏ.எல்.பீர்முஹம்மது, கல்லூரியின் பிரதி அதிபர் மௌலவி வீ.ரீ.எம்.முஸ்தபா (தல்லிகி), கல்குடா உலமா சபை செயலாளர் மௌலவி எம்.எல்.இப்றாஹீம் (மதனி) மற்றும் விரிவுரையாளர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நாட்டில் உள்ள வறிய மாணவர்களின் நன்மை கருதி உருவாக்கப்பட்ட இக் கல்வி நிறுவனத்தில் ஆறாம் ஆண்டு தொடக்கம் கல்விப் பொதுத் தராதர உயர் தரம் வரை கல்வி கற்பிக்கப்படுவதுடன், மார்க்கக் கல்வியும் போதிக்கப்படுகின்றது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :