ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகரசபை புதிய உறுப்பினராக நிரோஷ்

னித உரிமை பணியாளரும், சுதந்திர ஊடகவியலாளருமான தியாகராஜா நிரோஷ், ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகரசபை உறுப்புரிமையில் ஏற்பட்டிருந்த வெற்றிடத்திற்கு, கட்சியின் அரசியல்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். 

2011ம் ஆண்டு நடைபெற்ற கொழும்பு மாநகரசபை தேர்தலில், தியாகராஜா நிரோஷ் ஜமமு சார்பில் போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில், ஜமமு ஊடக செயலாளர் பாஸ்கரா விடுத்துள்ள ஊடக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொழும்பு மாநகரசபை உறுப்புரிமை வெற்றிடத்துக்கு, தியாகராஜா நிரோஷை நியமிப்பதற்கான யோசனை தலைவர் மனோ கணேசனினால் பிரேரிக்கப்பட்டது. 

இந்த யோசனையை நேற்று மாலை கொழும்பில் நடைபெற்ற முன்னனியின் அரசியல் குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.

யாழ். புத்தூரை பிறப்பிடமாகவும், தற்சமயம் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட, 29 வயது இளைஞரான தியாகராஜா நிரோஷ் கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் மனித உரிமைகளும், சமாதானமும் டிப்ளோமா மற்றும் கலைப் பீடத்தின் பத்திரிகையியல் டிப்ளோமா ஆகியவற்றினை பெற்றுள்ளார். 

அத்துடன் போரின் பின்னரான முரண்பாட்டுத் தீர்வு கற்கையினையும் கற்றுள்ளார். இவர் தற்சமயம் கண்டி, பேராதனை பல்கலைக்கழகத்தில், கலைமாணிப் பட்டத்திற்காக அரசியல், பொருளாதாரம், மெய்யியல் பாடங்களை உள்ளடக்கிய வெளிவாரியாக கல்வியைத் தொடர்ந்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :