இலங்கை நாடு நமக்கும் சொந்தம் என்பதனை மறக்க வேண்டாம்-அன்சார்

லங்கை வாழ் முஸ்லிம் சகோதரர்களே..!! நாம் சில விடயங்களை இன்றைய காலகட்டத்தில் ஆழமாக சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம்.

நம் முஸ்லிம் சகோதரர்கள் சிலர் சொல்கின்றார்கள் மற்றும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்; இலங்கை நாடானது சிறுபான்மையின முஸ்லிம்களுக்குச் சொந்தமில்லை, இது முஸ்லிம்களின் நாடு இல்லை, இதற்கு நாம் விசுவாசமாக இருக்கத் தேவையில்லை என்று இலங்கையை வேற்று நாடாக இலங்கைக்குல் இருந்து கொண்டே வேற்றுக் கண்னோடு நோக்குகின்றார்கள்.

பௌத்த பேரினவாத அமைப்புக்கள்தான் இலங்கை முஸ்லிம்களுக்கு சொந்தமான நாடு அல்ல இது முழுக்க முழுக்க சிங்களவர்களுக்கே சொந்தம் முஸ்லிம்களும் ஏனைய சிறுபான்மையினரும் இலங்கையில் தங்கி வாழ்வோர் என்று இனப்பாகுபாடு பார்க்கின்றார்கள் என்றால் இதற்கு “ஆமாம் நாங்கள் அப்படித்தான்“என்று சொல்வது போல் எம் சகோதரர்களும் இருக்கின்றார்கள். அவர்களது செயற்பாடுகளும் இருக்கின்றது.

சில நம் முஸ்லிம் சகோதரர்களுடைய இந்த நாட்டுப்பற்றின்மை கிரிக்கட் விளையாட்டின் போது தவறாமல் வெளிப்படையாக புலப்படும்.

இலங்கை கிரிக்கட் அணியினருக்கும் பாகிஸ்த்தான் அணியினருக்கும் எப்போது கிரிக்கட் போட்டி நடைபெற்றாலும் சில நம் முஸ்லிம் சகோதரர்கள் பாக்கிஸ்தான் அணியினருக்கே தங்கள் ஆதரவைப் தெரிவிக்கின்றார்கள், மைதானங்களில் அவர்களுக்கே பதாதைகளை ஏந்திப்பிடிக்கிறார்கள். இப்போது தம்புள்ளையில் நடைபெறும் போட்டிகளிலும் இதே கதிதான்.

பாக்கிஸ்தான் அணியினர் முஸ்லிம்கள், அவர்கள் நம் இஸ்லாமிய சகோதரர்கள் அதனால்த்தான் அவர்களுக்கு நாங்கள் ஆதரவு வழங்குகின்றோம் என்று கூறி இலங்கை கிரிக்கட் அணியினரை நிராகரிப்பதாக நினைத்துக் கொண்டு இலங்கைக்குல் இருந்து கொண்டு இலங்கையை நிராகரிக்கிறார்கள், நம் இலங்கை தேசத்திற்கு துரோகமிழைக்கின்றார்கள் என்பதுதான் அப்பட்டமான உண்மை.

ஆமாம்...!! நீங்கள் கூறுவது போன்று பாகிஸ்த்தான் அணியினர் முஸ்லிம்கள்தான் அவர்கள் மாத்திரமல்ல இந்த உலகில் உள்ள அத்தனை முஸ்லிம்களும் நம் சகோதரர்கள்தான் அவர்களை நேசிப்பது நம் கடமை இதற்கு மாற்றுக் கருத்து இல்லை அதனால்தான் உலகில் முஸ்லிம்களுக்கு எதிராக எங்கு அநீதி நடந்தாலும் அதற்காக ஆர்ப்பாட்டம் செய்கின்றோம் போராட்டம் செய்கின்றோம்.

அதே சமயம் இலங்கை நம் நாடு என்ற வகையில் நாம் நம் நாட்டுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். நம் நாட்டில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், இந்துக்கள் இருந்தாலும், கிரிஸ்தவர்கள் இருந்தாலும் அத்தனைபேரும் இலங்கை என்ற நம் தாய்நாட்டுப் பிள்ளைகள்தான்.

எமது ஒரு சில முஸ்லிம் சகோதரர்களின் நாட்டுப்பற்றற்ற. செயற்பாடுகள்தான் சிங்கள இணையத்தளங்களிலும், முகநூல் பக்கங்களிலும் முஸ்லிம்களை தேசத்துரோகியாக வசைபாட வழி அமைத்துக் கொடுக்கின்றது என்பதை மறந்து விடவேண்டாம்.

முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு இனவெறித்தாக்குதல் இலங்கையில் நடைபெறுகிறது, பள்ளிவாசல்கள் உடைக்கப்படுகிறது, எமது கலாச்சாரம் பறிக்கப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை அதற்காக இவைகளைக் காரணம் காட்டி நாம் நாட்டுப்பற்று அற்றவர்களாக இருந்து விடக் கூடாது. முஸ்லிம்களுக்கெதிராக நடைபெறும் அடக்குமுறைகளுக்கு எதிராக நாம் அரசியல் ரீதியாக, ஜனநாயக ரீதியாக தீர்வைப் பெற்றுக் கொள்ள முனைய வேண்டும் அதற்காக எல்லா வகையிலும் நாம் உரித்துடையர்வகள்தான்.

நம் நாட்டு விளையாட்டுத் துறையினர் என்ற வகையில் இலங்கை கிரிக்கட் அணியினருக்கு நாம் ஆதரவு வழங்க வேண்டும். விளையாட்டில் மாத்திரமல்ல நமது ஒவ்வொரு செயற்பாடுகளிலும் நாட்டுப்பற்று மேலோங்கியிருக்க வேண்டும்.

ஆகவே சகோதரர்களே..!!! நம் நாடு இருக்குற நிலையில் இதுபோன்ற நடவடிக்கைகளை விட்டு விட்டு, வீணான பிரச்சினைகளுக்கு வித்திடாமல் முஸ்லிம்கள் என்ற வகையில் நம் இஸ்லாமிய கடமைகளை சரியாகப் பின்பற்றிக் கொண்டு வீட்டுக்கும் நாட்டுக்கும் விசுவாசமாக இருப்போம்.

மக்கள் நண்பன்
சம்மாந்துறை அன்சார்
இலங்கை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :