போசணைக் குறைபாட்டினை நிவர்த்தி செய்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு




ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-

லதுறைகளின் ஒருங்கிணைந்த செயற்பாட்டின் மூலம் போசணைக் குறைபாட்டினை நிவர்த்தி செய்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையில் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இயங்கும் தேசிய போசணைச் செயலகத்தின் தேசிய போசணை சபையினால் பல துறைகளின் ஒருங்கிணைந்த செயற்பாட்டின் மூலம் போசணைக குறைபாட்டினை நிவர்த்தி செய்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் சுகாதார சேவைகள் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு நிகராக இருந்தும் போசணைக்குறைபாடு பாரிய சவாலாக காணப்படுகின்றது. இதனை தவிர்க்க 17 அமைச்சுக்கள் ஒருங்கிணைந்து தேசிய போசணைச் செயலகம் ஜனாதிபதி செயலகத்தின்கீழ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உருவாக்கப்பட்டது.

இச்செயலகத்தினூடாக ஒவ்வொரு துறைகளினதும் பங்களிப்பு, அவற்றின் செயற்பாடுகள் போன்ற விடயங்கள் இவ்விழிப்பூட்டல் கருத்தரங்கின் ஊடாக எடுத்துரைக்கப்பட்டது. இதில் வளவாளர்களாக தேசிய போசணை சபையின் கலாநிதி லலித் சந்திரதாச, போசாக்கு நிபுணர் கலாநிதி ரேணுகா ஜெயதிஸ்ஸ, மொனராகல மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய அதிகாரிகள் பங்குபற்றினர்.

இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா, வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், அரசாங்க அதிபர்கள்ஈ அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :