நிந்தவூர் பொது விளையாட்டு மைதானம், பொதுச்சந்தை,புதிய பிரதேசசபை, கலாச்சாரமண்டபம், போன்ற பிரபல்யமான இடங்களுக்குப் பயணிக்கும் பாதையில் ஆளமாக அமைக்கப்பட்டுள்ள பிரதான வடிகானுக்கு மூடிகள் போடாமல் இருப்பதனால் பெரும் அபாயமாக இருப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட வடிகானுக்கான மூடிகள் போடாமல் விட்டிருப்பதனால் சிறுவர்கள், வயோதிபர்கள் பயணிக்கும் போது அவதானமாக இருக்கவேண்டும் இல்லையேல் தவறுதலாக வடிகானுக்குள் விழுந்து உயிராபத்து ஏற்படும் நிலை உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
எனவே சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக குறிப்பிட்ட வடிகானுக்கு உடனடியாக மூடிகள் பொருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
அவதானிப்புக்கள்-



0 comments :
Post a Comment