ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, தனது குழுவினருடன் இன்று இலங்கை வந்தனர்


லங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, தனது குழுவினருடன் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் கட்டுநாயக்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

ஜப்பான் பிரதமர் உள்ளிட்ட குழுவினரை விமான இறங்கு தளத்தில் வைத்து வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வரவேற்றார். அதையடுத்து, விமான நிலையத்தின் வரவேற்பறையில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அவரது பாரியர் ஹிராந்தி ராஜபக்ஷவும் ஜப்பானியப் பிரதமரையும், குழுவினரையும் வரவேற்றனர்.

இதனையடுத்து, கட்டுநாயக்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய கட்டுமானப் பணியொன்றை சற்று முன்னர் ஜப்பானியப் பிரதமர் ஆரம்பித்து வைத்துள்ளார்.

ஒருநாள் விஜயமாக இலங்கை வந்துள்ள ஜப்பானியப் பிரதமர் ஷின்ஷோ அபே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் இன்று பிற்பகலில் சந்தித்து இரு தரப்பு பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார்.

அதனையடுத்து, அவர், பாராளுமன்றத்திற்கான கண்காணிப்பு விஜயமொன்றையும் மேற்கொள்ளவுள்ளார். பின்னர் எதிர்க்கட்சி தலைவரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இலங்கையிலுள்ள முதலீடு சந்தர்ப்பங்களை விஸ்தரிப்பது தொடர்பான சந்திப்புக்களிலும் ஜப்பான் பிரதமர் பங்கேற்கவுள்ளார்.

இதனிடையே, ஜப்பான் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் நாளை திங்கட்கிழமை முற்பகல் மீண்டும் நாடு திரும்புவார். ஜப்பானியப் பிரதமர் ஒருவர் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை வந்திருப்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :