ஹெல்மெட் அணிவதால் கழுத்து, பிடறி, முழங்கை, தோள்பட்டை, மூட்டு ஆகிய பகுதிகளுக்கு ஆபத்து

தற்காகவே வாகனங்கள் ஓட்டும் போது ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதன் மூலம் பல்வேறு பாதகங்கள் இருப்பது தெரியவந்துள்ளது, ஹெல்மெட்டை அணியும் போது, அது தலையில் அழுத்துவதால், மூளையில் இருந்து உடலின் பல்வேறு பாகங்களுக்கு செல்லும் நரம்புகள் பாதிப்படைவது தெரியவந்துள்ளது.

இதனால் நாளடைவில் கழுத்து, பிடறி, முழங்கை, தோள்பட்டை, மூட்டு ஆகிய பகுதிகளில் வலி ஏற்படும். ஆனால் பெரும்பாலானவர்கள் இது பைக்கை தொடர்ந்து ஓட்டுவதால் ஏற்படுகிறது என்ற எண்ணத்தில் உள்ளனர்.

இது தவிர ஹெல்மெட் பக்கவாட்டுகள் காதுகளை அழுத்தும். அப்போது காதுகளின் கேட்கும் திறன் நரம்புகளில் வழக்கத்திற்கு மாறான அழுத்தங்கள் ஏற்பட்டு, பிற்காலத்தில் கேட்கும் திறனை பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

மேலும் கோடைகாலங்களில் கடுமையான வெயிலில் ஹெல்மெட் பயன்படுத்துவதால் ஏற்படும் அழுத்தம் காரணமாக ரத்தநாளங்கள் மற்றும் தலையில் உள்ள சக்தி நரம்புகள் அதிகம் பாதிக்கப்படுகிறது. இதனால் ஹெல்மட் அணியாத போதும் தலைவலி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

முதற்கட்டமாக அதிக எடை இல்லாத ஹெல்மெட்களை பயன்படுத்த வேண்டும்.

இது தவிர அவரவர் தலைக்கு ஏற்றவாறான அளவில் ஹெல்மெட்களை வாங்கி பயன்படுத்துவது மிகச்சிறந்து.

வாகனம் ஓட்டும் நேரம் தவிர, சிக்னல் உள்ளிட்ட இடங்களில் நிற்க நேரிட்டால் அப்போது ஹெல்மெட்டை சிறிது நேரம் கழற்றி பின்னர் போட்டுக்கொள்ளலாம்.

இன்றைக்கு பல பைக் ஓட்டிகள் செய்யும் மிகப்பெரிய தவறு ஹெல்மெட்டில் செல்போனை வைத்து பேசுவதுதான். ஹெல்மெட் அணிபவர்கள் கட்டாயம் இதுபோன்ற செயலை தவிர்க்க வேண்டும். <தமிழ் news BBC>
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :