இறக்காமம் அல்-மதீனா வித்தியாலயத்தில் 3நாள் சாரணர் பாசறை-படங்கள்









பைஷல் இஸ்மாயில், பிக்கீர்-

க்கரைப்பற்று/ கல்முனை மாவட்ட சாரணர் சங்கம் ஏற்பாடு செய்த மூன்று நாள் சாரணர் பாசறை சது/அல்-மதீனா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் ஏ.ஜெளபர் தலைமையில் 26,27,28 ஆகிய மூன்று தினங்களும் இடம்பெற்றன.

மூன்று நாள் சாரணர் பாசறைக்காக அம்பாரை மாவட்டத்தில் உள்ள தமிழ், முஸ்லிம், கிறிஷ்தவ மாணவர்களடங்கிய பாடசாலைகள் பங்கு பற்றியதுடன் பல நிகழ்வுகளும் இடம்பெற்றன.

ஆரம்ப நிகழ்வு அக்கரைப்பற்று/ கல்முனை மாவாட்ட கெளரவ ஆணையாளரும் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளரும் ஆரம்ப கால சிறந்த உதைப்பந்தாட்ட மற்றும் விளையாட்டுத்துறை வீரருமான எம்.ஐ.முஸ்தபா பிரதம அழைப்பாளராகவும் பாசறைத்தலைவராகவும் கலந்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

இரண்டாம் நாள் நிகழ்வில் இறக்காமம் பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள் ஊர் பிரமுகர்கள் புத்தி ஜீவிகள் பலரும் கலந்து கொண்டதுடன் இரவு நிகழ்ச்சியான சாரணர்களின் மேலதிகத் தகமையான நிகழ்வுகளுக்கு பிரதம விருந்தினராக மேலதிக நீதிமன்ற நீதிபதியும் அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதியுமான கெளரவ பஷீல் கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்து சாரண மாணவர்களின் நிகழ்வுகளைக் கண்டுகளித்ததுடன் அங்கு பார்வையாளர்களாக சமூகமளித்திருந்த பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் மத்தியில் நீண்ட சிறந்த உரை ஒன்றினையும் நிகழ்த்தினார்.

மூன்றாம் நாள் நிகழ்வுகளுக்காக இன்று பிரதம விருந்தினராக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் முன்னால் அக்கரைப்பற்று, கின்னியா, சம்மாந்துறை, கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளரும் மாவட்ட, மாகாண சாரண ஆணையாளருமான ஊ.எல்.எம்.காசிம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்து பயிற்சிகளில் சிறந்த மாணவர்களுக்கான கேடயங்களையும் வழங்கி வைத்தனர்.

இப்பாசறையின் மேலதிக சிறந்த நடவடிக்கைகளில் முதலாமிடத்தை கல்முனை RKM வித்தியாலயமும் இரண்டாம் இடத்தை கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியால்யமும், மூன்றாம் இடத்தை இரக்காமம் அல்-மதீனா வித்தியாலயமும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சாரணர் பாசறையின் பயிற்சியாளர்களாக உதவி மாவட்ட ஆணையாளர்களான ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், அம்பாரை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ், ஊடகவியலாளர் எம்.எப்.றிபாஸ், மற்றும் பல ஆசிரியர்களும் பங்கு பற்றி பயிற்சிகளை வழங்கினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :