இன்று ஈராக்கில் ISIS அமைப்பினர் அங்கிருக்கும் ஷீயாப் பிரிவினருக்கு எதிராகவும், அமெரிக்க ஆதரவில் இயங்கும் அந்நாட்டு அரசுக்கெதிராகவும் இறைவழியில் ஆயுதப் போராட்டம் செய்து ஈராக்கில் பல்வேறு நகரங்களையும் கைப்பற்றி அங்கு கிலாபத் ஆட்சியையும் அறிமுகப்படுத்தியிருக்கின்றார்கள். இதே போன்று சிரியாவிலும் பல நகரங்களை அவர்கள் கைப்பற்றியிருக்கிறார்கள்.
சிரியா மற்றும் ஈராக் உள்நாட்டுப் போரில் அமெரிக்கா தலையிட்டுள்ளமையால் அமெரிக்காவை பலி வாங்குவதாக நினைத்து அவர்கள் போரிலே பிடிபட்ட 300 க்கும் அதிகமான சிரிய சிப்பாய்களை உள்ளாடைகளுடன் படுக்க வைத்து சுட்டுக் கொள்ளும் காட்சி அண்மையில் வெளியாகி இருந்தது. இதற்கு முன்னரும் இவ்வாறு வெளியாகியிருந்தது.
மேலும் அவர்களால் பிடிபடும் எதிரணிப் போராளிகள் மற்றும் அமெரிக்கர்களது தலைகள் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஈராக்கில் உள்ள கிரிஸ்தவ மக்களை வலுகட்டாயமாக மதம்மாற்றுவதாகவும், அப்படி இல்லாவிட்டால் அதிக வரி செலுத்துமாறும் அவர்கள் நிர்பந்திக்கப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இணையத்தள செய்திகள் வாயிலாக நாம் அறியும் இத்தகைய இவர்களது அட்டூழியங்கள் உண்மையானதா அல்லது இவர்களை மீடியாக்கள் தவறாக சித்தரிக்கின்றதா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. எது எவ்வாறாயினும் இத்தகைய கொடூர சம்பவங்களை ISIS செய்வார்களாக இருந்தால் இது முற்று முழுதாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
இவர்களுடைய இத்தைகய காட்டுமிராண்டித்தனமாக போக்குகளால்தான் இஸ்லாம் என்றால் தீவிரவாதம் எனும் பதம் இன்னும் அந்நிய மத சகோதரர்களால் பிரயோகிக்கப்படுகின்றது.
இஸ்லாத்தில் எதிரிகளோடு போர் புரியும் போது அதற்கு சில நெறிமுறைகளை, சட்டதிட்டங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழகாக காட்டித்தந்திருக்கின்றார்கள் ஆனால் ISIS அமைப்பினர் பிடிபடும் கைதிகளை கொடூரமாக கொல்லுகிறார்கள் போர்க்களத்தில் பிடிபடும் கைதிகளை கொல்லும் படி இஸ்லாத்தில் எங்கே சொல்லப்பட்டிருக்கின்றது...???
ISIS என்ற அமைப்பினர் இஸ்லாமிய கிலாபத் ஆட்சியைத்தானே ஏற்படுத்துகிறார்கள், அவர்கள் ஜிஹாத் தானே செய்கிறார்கள் என்று ISIS அமைப்புக்கு வக்காலத்து வாங்குவோர் சற்று சிந்தியுங்கள்.
ISIS அமைப்பினரின் ஜிஹாத் போராட்டத்தின் இலட்சணம் இதுதானா...??
இதில் அவர்கள் ஐந்தாண்டு திட்டம் வேறு தீட்டியிருக்கிறார்கள் அதாவது இன்னும் ஐந்தாண்டுகளில் ஈராக் முழுவதையும்,அவர்கள் கைப்பற்றியதன் பின்னர், அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியா, இலங்கை போன்ற ஆசிய நாடுகளையும் கைப்பற்றும், ஐ.எஸ்.ஐ.எஸ்.,சின், ஐந்தாண்டு திட்டம் தயாராகி வெளியாகியுள்ளமை உலக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களது ஐந்தாண்டு திட்டத்தில் அவர்கள் இலங்கையையும் சேர்த்து இருக்கின்றார்கள். இன்னும் ஐந்தாண்டில் இலங்கையையும் அவர்கள் கைப்பற்றி கிலாபத் ஆட்சி அமைக்க இருக்கின்றார்களாம். அவர்கள் எம் நாட்டை கைப்பற்றும் வரை எம் கைகள் என்ன மாங்காயா பறிக்கும்..????
இலங்கை எமது தாய்நாடு, எமது சொந்தமண், இங்கு நாம் சிறுபாண்மையினராக இருந்தாலும் இலங்கை எம் பூர்வீகமே.
எம் தாய்நாட்டுக்கு எதிராக அவர்கள் எப்படி போராடலாம்..?? எப்படி அவர்கள் இலங்கையில் கை வைக்கலாம்....???? அதற்கு எப்படி நாம் இடம் கொடுக்கலாம்...???
இஸ்லாம் கூறும் உண்மையான கிலாபத் ஆட்சி வேறு இவர்கள் ஏற்படுத்தி இருக்கும் கிலாபத் ஆட்சி வேறு. கைதிகளை கொடூரமாக கொன்று குவிக்கும் இவர்களா கிலாபத் ஆட்சியை ஏற்படுத்துபவர்கள்...???
ஆகவே முஸ்லிம்களே..!! இலங்கையைப் கைப்பற்றுவது ISIS அமைப்பினரின் எத்தனை ஆண்டு திட்டமாக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் அதற்கு இலங்கை முஸ்லிம்களாகி நாம் இடம் கொடுக்கக் கூடாது.
இலங்கை என்ற நாட்டுப் பற்றுடைய எந்த உண்மை முஸ்லிமும் எம் நாட்டை எக்காரணம் கொண்டும் எவனுக்கும் விட்டுக் கொடுக்கமாட்டான். அப்படி எவராவது வந்தாலும் அவர்களுக்கெதிரான நாம் ஜிஹாத் என்ற புனிதப் போர் தொடுக்க வேண்டும் அவர்கள் எம் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரியே.
.jpg)
0 comments :
Post a Comment