கௌரவிப்பும், அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும் -படங்கள்











நிஸ்மி, அக்கரைப்பற்று-

க்கள் சேவையாளர்கள் கௌரவிப்பும், அபிவிருத்தி; திட்டங்கள் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வொன்றும்; நேற்று முன்தினம் (30.08.2014) அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில்; நடைபெற்றது. விவசாய அமைப்பக்களின் பிரதிநிதியும் அம்பாரை மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளருமான ஐ.எல்.தௌபீக்தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி மாகாண சபைகள்அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களும் கௌரவ அதிதியாக மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன, வீடமைப்பு நிர்மான,கிராமிய மின்சார, நீர் வழங்கள் அமைச்சர் எம்.எஸ்.உதுமா லெவ்வை, சிறப்பு அதிதிகளாக இடமாற்றம் பெற்றுச் சென்ற அம்பாரை நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் சமன் வீரசிங்க, அம்பாரை நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் நிமல் சிறிவர்த்தன, மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.அன்சார், மொனராகல மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.எல்.எம்.அலியார், அக்கரைப்பற்று நீர்ப்பாசனப் பொறியியலாளர் எம்.ஐ.எம்.இஸற்.இப்றாகிம், அக்கரைப்பற்று,  பிரதேச செயலாளர்களான ஏ.எல்.எம்.சலீம், ஐ.எம்.ஹனிபா, விவசாய அமைப்புக்களின் பிரதிநிதியும் அம்பாரை பிரதி திட்டமிடல் பணிப்பாளருமான ஐ.எல்.தௌபீக், பொறியியல் உதவியாளர் முஸா லெவ்வை,அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் பொது சனத் தொடர்பு உத்தியோகத்தரும் மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம்.ஸபீஸ்,மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வையின் இணைப்பாளர் யூ.எல்.உவைஸ், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல், மாநகர சபை உறுப்பினர் கே.எம்.ஸருக், கமநல சேவை நிலையத் தலைவர்ஏ.சம்சுதீன் ஹாஜ், கல்லோயா வலது கரை நீர்ப்பாசன திட்ட விவசாய அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் எம்.ஐ.எம்.அபூபக்கர், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில் பாலமுனை பிரதேச விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதிதிகள் மாலையிட்டு வரவேற்று அழைத்து வரப்படுவதையும்,முன்னாள் நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் சமன் வீரசிங்க, அம்பாரை நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் நிமல் சிறிவர்த்தன, மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.அன்சார், மொனராகல மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.எல்.எம்.அலியார், அக்கரைப்பற்று நீர்ப்பாசனப் பொறியியலாளர் எம்.ஐ.எம்.இஸற்.இப்றாகிம், அம்பாரை பிரதம நீர்ப்பாசனப் பொறியியலாளர் ஏ.கே.ஜப்பார், பொறியியல் உதவியாளர் முஸா லெவ்வை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர்களான ஏ.எல்.எம்.சலீம், ஐ.எம்.ஹனிபா, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் ஆகியோர்களின் சேவையைப் பாராட்டி உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்கள் பொன்னாடை போர்;த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.
உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா மற்றும் மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன, வீடமைப்பு நிர்மான,கிராமிய மின்சார, நீர் வழங்கள் அமைச்சர் எம்.எஸ்.உதுமா லெவ்வை,ஆகியோர்களின் சேவையைப் பாராட்டி விவசாயிகள் சார்பில் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பின்னர் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமா லெவ்வையுடன் இணைந்து அட்டாளைச்சேனையில் பூர்த்தி செய்யப்பட்ட வள்ளக் குண்டு வடிச்சல் திட்டத்தை மக்களிடம் கையளித்ததோடு, வள்ளக் குண்டு வீதி அமைப்பு வேலைகளையும் ஆரம்பித்து வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :