புல்மோட்டை பிரதேச காணிகள் இணக்கப்பாட்டுடன் அளவைகள் ஆரம்பம்



புல்மோட்டை பிரதேச காணிகளை அளவிடுவது தொடர்பாக ,ன்று விசேட கலந்துரையாடல் ஒன்று பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சுசந்த புஞ்சி நிலமே அவர்களின் தலைமையில் (05) செவ்வாய்க் கிழமை குச்சவெளி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஆர்.எம்.அன்வர் மாவட்ட அரசாங்க அதிபர்,பிரதேச சபை உறுப்பினர்கள்,மாகாண காணி ஆணையாளர், பிரதேச செயலாளர், திருமலை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்,சிரேஸ்ட பொலிஸ் அத்திட்சகர், உதவிப்பொலிஸ் அத்தியட்சகர், நிலஅளவைத்திணைக்கள அதிகாரிகள், புதை பொருள் திணைக்கள அதிகாரிகள், மதகுருமார்கள் மற்றும் ஊர்ப்பிரமுகர்கள் உட்பட குறித்த பிரதேசத்தில் வசித்து வருகின்ற சிலரும் ,க்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில் கடந்த பல வருடங்களாக புல்மோட்டை பிரதேச காணிகள் அளவிடுவதில் பாரிய பிரச்சினைகள் ,ருந்து வந்துள்ளன அதன் மூலம் அரசியல் பிரதிநிதிகள் மக்களுக்காக குரல் கொடுத்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு குறிப்பிட்ட சில நாட்களுக்கு முன்னர் அவர்கள் அதிலிருந்து விடுதலையாகியும் ,ருக்கின்றார்கள.; ஆகவே காணிகள் அளவீடு தொடர்பில் ,ருக்கின்ற சிக்கல் நிலமைகளை தவிர்த்து அளவிடுவதே அப்பிரதேச மக்களின் எதிர்பார்பார்ப்பாகும். 

அதனையே அப்பிதேச அரசியல் பிரதிநிதிகளும் கோரினர். அவ்வாறான ஒரு தீர்வுக்கான ஒரு கலந்துரையாடலாக இன்றைய நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் காணிகள் அளவீடு செய்யும் போது மக்களின் குறித்த காணிகளுக்கு எந்தவித ,டையூறும் விளைவிக்கப்படமாட்டாது என்றும்; அனுமதிப்பத்திரம் மற்றும் அனுமதிப்பத்திரம் இன்றி பல வருடங்களாக வசித்து வருபவர்களையும் எவ்வித அச்சமுமின்றி தொடர்ந்தும் வசிக்குமாறும் மாவட்ட பிரதி அமைச்சர் தலைமையில் வாக்குறுதியளிக்கப்பட்டு பொதுமக்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டதுடன் உரிய கிராம சேவகர்களுக்கு நில அளவையாளர்களுடன் இணைந்து பொது மக்களுடைய காணிகள் இனங்காண்பதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

தன்போது கடற் படையினரால் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் வீட்டுன் பல வந்தமாக பிடிக்கப்பட்டிருப்பது குறித்து மாகாண சபை உறுப்பினர் அன்வரால் கேள்வி எழுப்பப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் மற்றும் அரச அதிபர் தாம் விரைவாக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :