அஷ்ரப் ஏ சமத்-
சிறந்த ஊடகவியளர்களுக்கான விருது வழங்கள் 2014 இன்று(5)ஆம் திகதி கல்கிசை ஹோட்டலில் இன்று இரவு நடைபெற்றது. இந் நிகழ்வு இலங்கை பத்திரிகை ஸ்தாபணத்தினால் 15வது முறையாக நடைபெற்றது.
வீரகேசரி, உதயன் பத்திரிகை, நவமனி, தினக்குரல் ஆகிய பத்திரிகைகளில் கடமையாற்றும் ஊடகவியலாளர்களுக்கும் விருதுகள் மற்றும் திறமைச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
சிறந்த படப்பிடிப்பாளர், கேலிச் சித்திரம் வரைதல், சூழலியல் கட்டுரைகள், புலன்விசாரணை செய்திகள், சிறந்த பக்கவடிவமைப்பாளர், விளையாட்டு செய்தியாளர், பந்தி எழுத்தாளர், வியாபார செய்தியாளர், இளம் ஊடகவியளார், வாழ் நாள் சாதணையாளர்கள் என்ற துறைகளில் நூற்றுக்கணக்கான போட்டியாளர்களில் இருந்து மும்மொழிகளிலும் முறையே 3விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நாட்டில் மும்மொழிகளிலும் நாளாந்தம், வாரந்தம் என 30க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் வெளிவருகின்றன. அவற்றில் தமிழ் மொழி மூலம், வீரகேசரி, தினக்குரல், சுடர் ஒளி, தினகரன், நவமணி, யாழ்ப்பாணத்திலிருந்து உதயன், வலம்புரி, ஆகிய பத்திரிகைகள் வெளிவருகின்றன.
தொடர்ந்தும் தமிழ் மொழி விருதுகள் வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகளில் சேவையாற்றும் ஊடகவயியாளர்களுக்கு விருது மற்றும் திறமைச்சான்றிதழும் வழங்கப்பட்டு வருகின்றது. இவ் ஆண்டு முதன் முறையாக திறமைச்சான்றிதழ் நவமணிக்கும், மற்றும் உதயன், வலம்புரி பத்திரிகையின் 3 ஊடகவியளர்களுக்கு கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
லேக்ஹவுஸ் பத்திரிகையாசிரியர்கள் பத்திரிகை ஸ்தாபணத்தில் அங்கத்தவர்களாக இல்லை என சொல்லப்படுகின்றது. இதனால் லேக் ஹவுஸ் பத்திரிகையாளர்களுக்கு இவ் விருது கிடைக்கப்பெறுவதில்லை.
இந் நிகழ்வு இலங்கை பத்திரிகை ஸ்தாபணத்தின் தலைவர் குமார் நடேசன் செயலாளர் ஞாயிறு வீரகேசரி ஆசிரியர் பிரபாகன், நவமணி ஆசிரியர் என்.எம். அமீன் மற்றும் பத்திரிகைகளது ஆசிரியர்கள் கலந்து விருதுகளை வழங்கி வைத்தனர். இந் நிகழ்வில் நாட்டில் உள்ள சகல பத்திரிகையாசிரியர்கள், ஊடகவியலாளர்கள் 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment