தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையின் அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயத்தின் முகாமைத்துவத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை 14 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய முகாமையாளர் ஐ.எல்.ஹைதர் அலி தெரிவித்தார்.
இதன்படி அக்கரைப்பற்றுப் பிராந்திய காரியாலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் நாளை புதன்கிழமை (06) காலை 9.00 மணி முதல் இரவு 11.00 மணி வரையான 14 மணி நேரத்திற்கு நீர்வெட்டு அமுலில் இருக்கும்.
குறித்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த வேலைகளே இந்நீர்வெட்டுக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
நீர் வெட்டு அமுலில் உள்ள காலப்பகுதிக்குத் தேவையான நீரினை சேமித்து வைப்பதன் மூலம் சிரமங்களில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறு குறித்த பிரதேச மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
.jpg)
0 comments :
Post a Comment