பிரயாணிகளின் நன்மை கருதி மட் –கல்முனை மஞ்சன்தொடுவாய் வீதியியில் ஜூம்மா பள்ளிவாயல்

 பழுலுல்லாஹ் பர்ஹான்-

ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தின் அனுசரனையுடன் அபிவிருத்திற்கும் மனிதாபிமானத்திற்குமான சர்வதேச அமைப்பின் 12 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வெளி ஊருலிருந்து வரும் பிரயாணிகளின் நன்மை கருதி மட்டக்களப்பு –கல்முனை மஞ்சன்தொடுவாய் பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்ட ஜாமிஉல் கர்னி ஜூம்மா பள்ளிவாயல்  22-08 வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையுடன் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இதன் போது இப் பள்ளிவாயளின் நினைவுக் கல்லை சவூதி அரேபிய அல் கஸீம் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அபூ ஸூலைமான் அப்துல்லாஹ் ஸாலிஹ் அல் ஹத்லூல், சவூதி அரேபிய சமூக நலன் விரும்பியும், நிதாஉல் கைர் அமைப்பின் பணிப்பாளருமான அஷ்ஷெய்க் அபூ ஸாலிஹ் ஹாலித் அத்தாவூத், மற்றும் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் திரை நீக்கம் செய்து வைத்தனர்.

இங்கு பள்ளிவாயல்களின் முக்கியத்துவம் தொடர்பில் ஜூம்மா உரையை திஹாரிய தன்வீர் அகடமியின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அப்துல் முஜீப் (மதனி)நிகழ்த்தினார்.

இதில் விஷேட உரை சவூதி அரேபிய அல் கஸீம் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அபூ ஸூலைமான் அப்துல்லாஹ் ஸாலிஹ் அல் ஹத்லூலினால் அரபு மொழியில் நிகழ்த்தப்பட்டது இதனை அல்-மனார் நிறுவனத்தின் தஃவாப் பிரிவு பொறுப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.மன்சூர் (மதனி) தமிழில் மொழி பெயர்த்தார்.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு ,காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபைகளின் தலைவரும்,காதி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.எம். அலியார் (பலாஹி), ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல் மும்தாஸ் மதனி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், சமூக சேவையாளர் ஹக் ஹாஜியார் ,காத்தான்குடி நகர சபை உறுப்பினர் அலி சப்ரி ,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட்,முன்னாள் காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் மர்சூக் அஹமட் லெப்பை மற்றும் உலமாக்கள்,ஊர் பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் உட்பட பெரும் திரளான பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :