ஏ.ஜ.ஹஸ்ஸான் அஹமத்-
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான, கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவையின் பேச்சாளர் தேசகீர்த்தி எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் ஏற்பாட்டில் ஆற்றங்கரை உடற்பயிற்சி நடைப்பாதைக்கான இன்டலொக்கிங் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தலுடன் நடைபெறும் புனித ரமழான் மாதத்தின் இப்தார் நிகழ்வு 26.07.2014 ந் திகதி சனிக்கிழமை அட்டாளைச்சேனை பாலத்தடி முன்றலில் நடை பெறவுள்ளது.
நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களும், மக்கள் பிரதிநிதிகள், மத்திய அரசாங்க, மாகாண அதிகாரிகள், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மத்ரஸா மாணவர்கள், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், மாணவர்கள், உள்ளுர் அரசியல், சமூகப் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
.jpg)
0 comments :
Post a Comment