காரதீவு செய்தியாளர்;
கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர்; பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாட்டுப்பழை மடத்தடி மீனாட்சியம்மன் ஆலயம் இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சம்மாந்துறைப் பொலிஸாருக்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதும் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ தலைமையிலாக பொலிஸ் குழு ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா.
ஆலய கர்ப்பக்கிருக நுழைவாயில் தகர்க்கப்பட்டிருக்கிறது. கதவிலுள்ள இரும்பு பட்டி உடைத்து வளைக்கப்பட்டிருப்பதோடு பூட்டுள்ள பகுதி திருகி உடைக்கப்பட்டுள்ளது.
ஆலய வளாகத்திலிருந்த மற்றுமொரு களஞ்சிய சாலைகள் இரண்டு உடைக்கப்பட்டுள்ளன. பூட்டுகள் அந்த இடத்திலேயே வீசப்பட்டுக்கிடந்தன.
ஆலயத்தினுள் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருக்கிறது. ஆலய வளாகத்திலுள்ள கிணற்றிலுள்ள கம்பி கழற்றி திருகி அருகிலுள்ள வயலுக்குள் தூக்கிவீசப்பட்டுள்ளது. மேலும் கற்பூரம் எரியவைக்கும் இரும்புத்தாங்கியும் அடியோடு கழற்றி வயலுக்குள் தூக்கிவீசப்பட்டுக்கிடந்தது.
அவற்றையயெல்லாம் பொலிஸார் முன்னிலையில் ஆலய நிருவாகத்தினர் மீட்டனர். ஆலய பரிபாலனசபைத்தலைவர் கோ.கமலநாதன் உபதலைவர் கே.ஜெயசிறில் உள்ளிட்ட நிருவாக சபையினர் அனைவரும் ஆலயத்திற்கு வந்து சேர்ந்தனர்.
ஆலய தலைவர் கோ.கமலநாதன் கருத்துத் தெரிவிக்கையில்.
இவ்வாலயம் கி.பி.12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. நாகங்களால் நிறைந்தது. இரவில் இங்கு யாரும் நிற்பதில்லை.
காலையில் ஆலயத்திற்கு வந்தபோது ஆலயம் உடைக்கப்பட்டிருப்து கண்டு அதிர்ச்சியும் வேதனையும் ஆத்திரமும் அடைந்தேன். மறுகணம் சம்மாந்துறைப்பொலிஸாருக்கு அறிவித்தோம். ஆலயத்தினுள் இருந்த பொருள்விபரம் காணாமல்போன பொருள்விபரம் பற்றி இன்னும் கணக்கெடுப்பு நடாத்தப்படவில்லை. பொலிசார் வந்தபிற்பாடே அதனை மேற்கொள்ளமுடியும். என்றார்.
இது வேணடுமென்றே விசமிகளால் செய்யப்பட்ட வேலையாக இருக்கலாமென பொலிஸார் தெரிவித்தனர். தாக்கப்பட்ட கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர்; பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாட்டுப்பழை மடத்தடி மீனாட்சியம்மன் ஆலயத்திற்கு திங்கட்கிழமை விஜயம் செய்து பார்வையிட்டனர்.கண்டனங்களையும் வெளியிட்டனர். கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான மு.இராஜேஸ்வரன் த.கலையரசன் காரைதீவு பிரதேசசபை தவிசாளர் வை.கோபிகாந் உறுப்பினர் முக்கியஸ்தர் கே.ஜெயசிறில் உள்ளிட்டோர் விடயமறிந்ததும் ஸ்தலத்திற்குவிஜயம் செய்து பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட படங்கள்.






0 comments :
Post a Comment