பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி மாணவன் மருதமுனையைச் சேர்ந்த ஏ.ஜே. அர்ஸாத் ஆத்தீஸ் சாரனியத்திற்கான ஜனாதிபதி விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவருக்கான ஜனாதிபதி விருது எதிர் வரும் 2014-07-30ம் திகதி கொழும்பு பண்டார நாயக்கா சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் ஜனாதிபதியினால் வழங்கப்படவுள்ளது.
இவர் 2007-07-10ம் திகதி தனது சாரணியத்திற்கான பணியை ஆரம்பித்தார் மிகவும் சுறுசுறுப்பாக தனது சாரணியப்பணியை முன்னெடுத்ததுடன் மிகவும் ஒழுக்கமாகவும் நடந்து கொண்டதன் காரணமா ஆசிரியர்களின் மத்தியில் நன்மதிப்பையும் பெற்றார்.
2012ல் இலங்கையில் நடைபெற்ற ஆசியப் பசுபிக் பிராந்தி சர்வதேச சாரணர் பாசறையில் பங்கு பற்றி இருபத்தைந்து நாடுகளைச் சேர்ந்த சாரணிய மாணவர்களின் தொடர்பையும் பெற்றுக்கொண்டவர் என்புது குறிப்பிடத்தக்கது.
சாரணியத்திற்கான இந்த விருதைப் பெறுவதற்கு காரணகர்த்தாக்களாக இருந்த அனைவருக்கும் இவர் நன்றி தெரிவித்துக் கொண்டார் இவர் மருதமுனையைச் சேர்ந்த வர்த்தகர் ஏ.சி.அப்துல் ஜப்பார் சஹீலா தம்பதியின் இரண்டாவது புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment