ஏ.ஜி.ஏ.கபூர் அக்கரைப்பற்று-
அனர்த்த முகாமைத்துவமும் அனர்த்த பாதுகாப்பு செயற்றிட்டமும் என்ற தொனிப் பொருளிலான விழிப்புணர்வுக் செயலமர்வொன்று இன்று 04.07.2014 வெள்ளக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு அக்கரைப்பற்று ஆயிஷா பாளிகா மஹா வித்தியாலத்தில் அனர்த்த முகாமைத்துவத்திற்குப் பொறுப்பான ஆசிரியை ஐனாபா.லெத்தீபு நிஸா ஹபீர் தலைமையில் நடைபெற்றது.
ஐக்கிய நாடுகள் ஹபிடாட் ருNர்யுடீஐவுயுவு நிறுவனத்தின் அனுசரனையுடன், அக்கரைப்பற்று மாநரசபை, அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து அக்கரைப்பற்று ஆயிஷா பாளிகா மஹா வித்தியாலய அனர்த்த முகாமைத்துவக்குழு இச் செயலமர்வினை ஏற்பாடு செய்திருந்தது.
இச் செயலமர்வில் அக்கரைப்பற்று ஆயிஷா பாளிகா மஹா வித்தியால அதிபர் எம்.ஏ.சி.அப்துல் ஹையு, அக்கரைப்பற்று- 03 கிராம நிலதாரி ஏ.எஸ்.ஹஸ்பி, ஆசிரியை ஐனாபா எப்.றபாயுதீன், அக்கரைப்பற்று-03 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்,; அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள்,அக்கரைப்பற்று ஆயிஷா பாளிகா மஹா வித்தியால அனர்த்த முகாமைத்துவக்குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள், மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment