ரியாஸ் நாபீ-
சவூதி அரேபியா அல்கசீம் இலங்கை நலன்புரிச் சங்கத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை 04/07/2014 புரைடாவில் நடாத்தப்பட்ட ரமழான் இப்தார் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இந்நிகழ்ச்சியின் போது இலங்கையின் மூன்று மாவட்டங்கலைச் சேர்ந்த சிறு நீரக நோயாளிகளுக்கு வைத்திய உதவிகளுக்கான பணம் எமது சங்கத்தினால் வழங்கப்பட்டது.மேலும் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விதவைப் பெண்ணிற்கு தொழில் உதவியாக தையல் இயந்திரம் வாங்குவதற்கான பண உதவியும் செய்யப்பட்டது. இறைவனின் கிருபையால் இந்நிகழ்ச்சிக்கு இலங்கையைச் சேர்ந்த 3௦௦ க்கு மேற்பட்ட சகோதர சகோதரிகள் வந்து கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது சங்கத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment