அக்கரைப்பற்றில் பரிகாரக்கற்பித்தல் தொடர்பான செயலமர்வு



அனாசமி-

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் கொய்க்கா திட்டத்தின் அடிப்படையில் மாணவர்களது அடைவுகளை மேம்படுத்தும் நோக்குடன் வகுப்பறையில் பின்னடைவான மாணவர்களினதும் கற்றல் இடர்பாடுகளைக் கண்டறிந்து பரிகாரக் கற்றலை மேற்கொள்வதற்காக பல்வேறு கற்றல் தொடர்பான முறைகளையும் யுக்திகளையும் வழங்கும் நோக்குடன் கொய்க்காத் திட்டம் அமுல்படுத்தப்பட்டு வரும் பாடசாலைகளினதும் அதன் ஊட்டப்பாடசாலைகளினதும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு இவ்வாரத்திலும் தொடர்ந்து நடைபெற்றது. 

அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் யுனிசெப் இணைப்பாளர் எஸ்.எம்.ஜெமீல் தலைமையில் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கல்குடா மட்டக்களப்பு பட்டிருப்பு திருக்கோவில் அக்கரைப்பற்று ஆகிய கல்வி வலயங்களினது ஆசிரியர்கள் பங்குபற்றினர். வளவாளர்களாக திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று வலயங்களின் ஆரம்பக்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர்களான பிகே. சிவசர்மா எம்.ஏ. அபுதாஹிர் ஆசிரிய ஆலோசகர்களான எஸ்.எல். மன்சூர் எம்.ஐ. நாசர் ஆகியோரும் கடமையாற்றினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :