இக்பால் அலியார்-
சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பினால் நோன்பு கால உலருணவு வழங்கும் வைக்கும் வைபவம் மேல் மாகாணத்தில் நடைபெற்றது.
சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி அஷய்க் ஜே. எம். இம்ரான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் சவூதி அராபிய நாட்டுப் பிரதிநிதி அஷய்க் அஹமட் அல் ஹிஜய்லி மற்றும் வத்தளை நகர சபை உப தவிசாளர் நௌசாட் உள்ளிட்டவர்கள் வழங்கி வைப்பதைப் படங்களில் காணலாம்.
இந்த உலருணவு மேல் மாகணத்திலுள்ள வத்தளை, ஹந்தானை, தெமட்டகொடை, வெல்லம்பிட்டிய, வியங்கல்லை, வெலிப்பன்னை ஆகிய பிரதேசங்களிலுள்ள மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment