இக்பால் அலி-
மாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவினால் தந்தையை இழந்த வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு நோன்புப் பெருநாள் நிதியுதவியும் மற்றும் புத்தாடைப் பொதிகளும் வழங்கி வைக்கும் நிகழ்வு கொழும்பு மோதர ஹம்சா பாடசாலையின் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தர்கா நகர் பிரதேசத்தில் இனவன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிறார்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. அதனை ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுச் செயலாளர் ஏ. எல். கலிலுர்ரஹ்மான் வழங்கி வைப்பதையும், இவ்வமைப்பின் அனாதைப் பிரிவுக்கான பொறுப்பதிகாரி அஷெய்க் செய்னுதீன் எஸ். பரீத், அஷெய்க் ரயிசுதீன் (ஸலபி) உள்ளிட்டவர்கள் அருகில் நிற்பதையும் நிதியுதவி வழங்குவதையும் கலந்து கொண்டவர்கள் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
இதில் இனவன்முறையால் பாதிக்கப்பட்ட தர்கா நகர் குடும்பதைச் சேர்ந்தவர்களின் தேவைகள் குறித்து கண்டறியப்பட்டதுடன் அவர்களுக்கு மேலதிகக் கொடுப்பனவும் வழங்கி வைக்ப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment