டிசிடி (DCD) அல்லது “டைசைனைட்யேமைட்” (dicyandiamide) பதார்த்தம் அடங்கிய ஐஸ்கிறீம் இலங்கையின் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் அணுசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர்,
கொழும்பில் கடந்த பொசன் போயா தினத்தன்று விநியோகிக்கப்பட்ட ஐஸ்கிறீமில் டிசிடி இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
ஐடிஐ நிறுவகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது ஐஸ்கிறீமில் பயன்படுத்தப்படும் பாலில் இந்த டிசிடி பதார்த்தம் கலந்துள்ளமை தெரியவந்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.
டிசிடி இலங்கையில் இல்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ள நிலையிலேயே இந்த தகவலை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
குறித்த தகவல் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சுகாதார அமைச்சு இது தொடர்பில் நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று நம்புவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

0 comments :
Post a Comment