எம்.எம்.ஏ.ஸமட்-
கிழக்கு மாகாண சபையில் மாகாண சபை உறுபப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீனினால் முன்வைக்கப்பட்ட இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கக் கூடிய விதத்தில் இடம்பெறும் பகிரங்கப் பேச்சுக்களைக் கட்டுப்படுத்தக் கூடிய அல்லது தடை செய்யக் கூடிய இலங்கையிலுள்ள சட்டங்கைளை அமுல்படுத்துவதை கிழக்கு மாகாண சபையினூடாக சட்டமா அதிபரை வலியுறுத்தும் தனிநபர் பிரேரணை கிழக்கு மாகாண சபையினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது
இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு கிழக்கு மாகாண சபையின் அமர்வு சபையின் தவிசாளர் ஆரியபதி கலபதி தலைமையில் ஆரம்பமானது.இதன்போது, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த கடும்போக்களார்களின் பகிரங்கப் பேச்சுகளினால் சிறுபான்மை சமூகம் வெகுவாகப் பதிக்கப்படுவதோடு; இனமுரண்பாடுகள் ஏற்படுவதால்; இவற்றைக் கட்டுப்படுத்தக் கூடிய அல்லது தடைசெய்யக் கூடிய இலங்கைச் சட்டங்களை நடைமுறைப்படுத்த கிழக்கு மாகாண சபையானது சட்டமா அதிபரை வலியுறுத்த வேண்டுமென முன்வைக்கப்பட்ட தனி நபர் பிரரேணையானது சபை அமர்வில் கந்துகொண்ட ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர் 17 பேரினாலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் சற்றுமுன்னர் திருகோணமலையிலிருந்து தெரிவித்தார்.

0 comments :
Post a Comment