ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் திங்கள் கிழமை (17) கண்டி, கட்டுகலை ஜூம்ஆ பள்ளிவாசலுக்குச் சென்று முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடினார்.
கண்டி மாநகர சபை ஸ்ரீ.ல.மு.கா உறுப்பினர் அஸ்மி மரிக்கார், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம். நயீமுல்லாஹ், தும்பனை பிரதேச சபை மு.கா உறுப்பினர் அம்ஜத் முத்தலீப் ஆகியோரும் இதில் பங்குபற்றினர். அமைச்சருக்கு வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து இப் பள்ளிவாசல் பாதைக்கு ஏழு இலட்சம் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கண்டி மாநகர சபை எல்லைக்குட்பட்ட செயல்திட்டங்களுக்கு இருபது இலட்சம் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீதியமைச்சர் ஊடகம்-
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment