ஞானசார தேரர் புனித குர் ஆனைப் பற்றி கூற அருகதையற்றவர் -சிப்லி பாரூக்

பழுலுல்லாஹ் பர்ஹான்-

பௌத்த மத போதனைகளை விளங்கத்தெரியாத பொதுபல சேனாவின் செயலளார் ஞானசார தேரர் புனித குர் ஆனைப் பற்றி கூற அருகதையற்றவர் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக்; தெரிவித்தார்.

இன்று (15.7.2014)செவ்வாயக்கிழமை கிழக்கு மாகாண சபையின் அமர்வில் உரையாற்றும் போதே அவர் மேற் கண்;டவாறு கூறினார்.

கிழக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் கடந்த 30 வருட கால யுத்தம் என்பது வெறுமனே இந்த நாட்டின் எதேற்சையாகவோ அல்லது தவறுதலாகவோ தொடங்கப்பட்ட யுத்தம் அல்ல. ஒரு சிறுபான்மை சமூகம் அரசியல் ரீதியாகவும்,பண்பாடு ரீதியாகவும்,அவர்களுடைய மொழி ரீதியாகவும்,மத ரீதியாகவும் அடக்கி ஒடுக்கப்பட்டதன் விளைவாக உருவாக்கப்பட்ட யுத்தம் என்பது அது ஒரு வெள்ளிடை மலை.இந்த யுத்தம் என்பது சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக அவ்வப்போது ஆட்சியிலிருந்த தலைவர்களும் மத தீவிரவாத போக்குகளைக் கொண்ட மதகுருமார்களும் இதற்கு தூண்டுதலாக இருந்தார்கள்.

இலங்கை போன்ற பல்லினமும் வாழ்கின்ற ஒரு நாட்டில் இன முறுகல்கள் என்பதும்இஇனங்களுக்கிடையிலான சிறிய சிறிய பிணக்குகள் என்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.ஆனாலும் அவ்வாறான இன முறுகல்கள் நல்ல முறையில் ஒவ்வொரு சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் தலைவர்கள்,மதத் தலைவர்கள்,புத்தி ஜீவிகள் ஒன்று சேர்ந்து மிகவும் நுணுக்கமாக கையாள்வதனூடாக அந்த முறுகல்கள் கலவரங்களாக வெடிக்காமல் பாதுகாக்க முடியும்.இலங்கை வரலாற்று பின்னணியை பார்க்கின்ற போது முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் 1886இல் தோற்றம் பெற்றது.

அன்றிலிருந்து இன்று வரை காலாகாலமாக இப்பிரச்சினை அவ்வப்போது தொடர்ந்து கொண்டே செல்கின்றது.1886 இதற்கு மூன்று வருடத்திற்கு முற்பட்ட காலத்தில் அதாவது 1883இல் சிங்கள-பௌத்த,சிங்கள-கிறிஸ்தவர்களுக்கிடையிலான மிகப் பாரிய கலகம் ஒன்று இந்நாட்டில் இடம்பெற்றது.

அப்போது இந்நாடு ஓர் காலணித்துவ நாடாக இருந்த போதும் இவ்விரண்டு சமூகங்களும் தமது நாட்டை மீட்டெடுப்பதற்கு பதிலாக தங்களுக்கிடையில் சண்டையிட்டதால் எமது நாட்டினுடைய சுதந்திரம் எட்டாக்கனியாக மாறியது.

இதற்கு அடுத்ததாக 1915இல் முஸ்லிம்களுக்கு எதிரான ஓர் பாரிய கலகம் இந்நாட்டில் உருவாகியது. அதனுடைய பின்புலம் அந்தக் கலகத்தினை தூண்டுவதற்கு ஏதுவாக இருந்த காரணிகளை பார்க்கின்ற போது வெறுமனே முஸ்லிம்கள் மீதும்இஅவர்களுடைய பொருளாதாரத்தின் மீதும் கொண்ட பொறாமையின் காரணமாகவே அது இருந்ததன்றி முஸ்லிம்கள் இந்நாட்டுக்கு எதிராகவோ அல்லது இந்நாட்டினுடைய இறைமையை பாதிப்பதற்கு ஏதுவாக செயற்பட்டார்கள் என்ற நியாயமான காரணம் இருக்கவில்லை.

கலகத்தை தூண்டி விட்டு இனவாதம் என்ற எண்ணெய்யை ஊற்றுவதனூடாக அந்தக் கலவரத்திற்கு மேலும் வலுச்சேர்த்தனர்;.

இதன் தொடரேட்சியாக பெரிய சிறிய கலவரங்களாக 2001 மாவனல்லை கலவரம் வரை சுமார் 30 கலவரங்கள் உருவாக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.2001 இல் மிக மோசமான கலவரத்தினை மாவனல்லையில் உருவாக்கினார்கள்.

இந்தக்கலவரத்திற்கு அடிப்படை காரணிகளாக பலவற்றை கூறினாலும் அதற்கு முக்கிய காரணிகள் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை வீழ்த்த வேண்டும் என்பதே தவிர வேறு எக்காரணமும் இருக்கவில்லை.

1883இல் சிங்கள-பௌத்தஇசிங்கள-கிறிஸ்தவர்களுக்கிடையில் கலவரம் உருவாவதற்கு காரணமாக இருந்தது சிங்கள-பௌத்தர்கள் சிங்கள கிறிஸ்தவர்களாக மிஷனரிகள் மூலமாக மதமாற்றம் செய்யப்பட்டதே முக்கிய காரணமாகும். இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகம் சிங்கள சமூகமாகும். அதிலும் 2000 வருடங்களுக்கு மேல் வரலாறுகளைக் கொண்டுள்ள சிங்கள சமூகம் தங்களது ஏகோபித்த மதமாக பௌத்தத்தை அவர்கள் பின்பற்றுகின்றனர். அந்த பௌத்தத்தை அவர்கள் உயிரிலும் மேலாக மதிக்கின்றனர்.

மதங்களுக்கிடையில் ஒற்றுமைஇபரஸ்பரம்இநல்லெண்ணம் என்கின்ற 03 விடயங்கள் உயர்ந்த நிலையில் இருக்கின்ற போது அதனை போதிக்கின்றவர்கள் தங்களுடைய மதத்தினை நன்கு விளங்கி போதிப்பது மட்டுமல்லாமல் அதனை பின்னற்ற வேண்டும்.

கழுகும் கோட்டானும் குடியிருக்கும்

இந்த இடத்தில் தாங்களா ? “

“துறவியே ஆந்தையும் வெளவாலும்

அலைகின்ற இந்த நேரத்தில்


என்று அசோகச் சக்கரவர்த்தி யுத்த களத்திலே நிற்கும் துறவியைப் பார்த்துக் கேட்க புத்த துறவி “நோயிருக்கும் இடத்தில்தானே வைத்தியனுக்கு வேலை ” என்று கூறி ” அன்புதான் இன்ப ஊற்று, அன்புதான் உலக ஜோத, அன்புதான் உலக மகா சக்தி” என்று புத்தர் போதித்த அன்பின் மகத்துவத்துவத்தையும் மனித நேயத்தையும் அசோகனுக்கு போதிக்கிறார். கலிங்க யுத்தம் தொடங்க முன்னரே அசோகனுக்கு யுத்தத்தின் தீங்கு பற்றி அவர் வழங்கிய உபதேசங்களை உதாசீனம் செய்துவிட்டு கலிங்கப் போரில் பல்லாயிரக்கனக்கான போர் வீரர்களைக் கொன்றழித்தபின் அசோகன் கழிவிரக்கம் கொள்கிறான்.மீண்டும் யுத்த களத்தில் வைத்து போதி மரத்து புத்தனின் பக்கம் அவனைத் திருப்புகிறார் அந்த புத்த துறவி. அசோகனின் மண்ணாசையையும் அதனால் விளைந்த மனித அழிவுகளையும் அவன் கண்டு மனம் நெக்குருகிறான்

அசோகன் மௌரிய சாம்ராஜ்யத்தை இந்தியாவில் உருவாக்கியவர். ஆனால் தனது ஆட்சி . அதிகாரம் செல்வம் என்று எல்லாவற்றையும் கைவிட்டு புத்த மதத்தை தழுவி தனது சொந்த மகன் மஹிந்தரையும் சங்கமித்தையையும் புத்த போதனை செய்ய பணித்தவர். அவர்களும் அரச கட்டிலையும் ஆட்சியையும் தகப்பன் வழி தொடர்ந்து இதுறந்து புத்த கோட்பாடுகளைப் பரப்ப இலங்கை உட்பட அண்மைய நாடுகளுக்கு பயணித்தவர்கள். அசோகச் சக்கரவர்த்தியின் அர்ப்பணங்கள் மூலமே இலங்கையிலும் பௌத்த மதம் காலூன்றியது என்பது வரலாறு . ஆயினும் புத்தனின் போதனைக்கு உயிர் கொடுத்தவன் ஒரு சாமராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக இருந்து சாமான்யனாயாக மாறிய அசோகன். இந்த மாபெரும் தியாகத்தின் மூலம் அவன் புத்தனின் கோட்பாடுகளை வாழ்ந்து காட்டியவன். அவனுக்கு பௌத்த தர்மம் அன்பை

அப்படியான பௌத்த மதம் இலங்கைக்கு அசோகனின் புத்திரனால் புத்திரியால் அறிமுகம் செய்யப்பட்டது. இலங்கை மன்னன் தேவநம்பிய தீசன் அதனை பின்பற்றி ஒழுகினான் என்று வரலாறு எழுதி வைத்துள்ளது. ஆனால் இன்றைய இலங்கையில் சில பௌத்த துறவிகள் போர்முரசறைந்து இ முஸ்லிம்களுக்கு எதிராக புறப்பட்டிருக்கிறார்கள். ஒரு உண்மையான புத்த துறவி ஒரு சாம்ராஜ்யத்தையே ஆண்ட பேரரசனை ” அன்புதான் இன்ப ஊற்று இஅன்புதான் உலக ஜோதி அன்புதான் உலக மகா சக்தி” என்று அடக்கி ஆண்டான் இஆனால் இன்று இந்த பல சென இ சிங்கள ராவய என இ இன்னொரன்ன சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் பௌத்த மத இயக்கங்கள் என்று தங்களை அடையாளப்பபடுத்திக் கொள்வதே பௌத்த மதத்தையே இழிவு படுத்துவதாகும். அன்பிற்குப் பதிலாக அழிவை போதிக்கும் மதமல்ல பௌத்த மதம் என்பதற்கு அசோகனின் வரலாற்றை விட வேறு என்ன சான்று வேண்டும்.

எல்லோரும் அதாவது குறிப்பாக பொதுபலசேன அமைப்பின் செயலாளர் அவர்கள் முஸ்லிம்கள் இந்த நாட்டில் குறுகிய காலத்துக்குள் வந்தவர்கள்இஇந்த நாட்டை சூறையாட வந்தவர்கள் என்று சொல்கின்ற குற்றச்சாட்டு எவரும் பதிலளிக்காததால் அவர் சொல்கின்ற அந்தப்பொய்கள் உண்மையாகி விடாது. இதற்கு உதாரணமாக 2வது புவனேகுபாகுவின் மகன் கலே பண்டார இலங்கையில் ஆட்சிசெய்த முஸ்லிம் மன்னனாவான். இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிலே ஆயிரம் வருடங்களுக்கு மேல் வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதற்கு நான் சில உதாரணங்களை சொல்ல வேண்டும். ஹஸ்த்திஸைலா புரத்தை ஆட்சிசெய்த புவனேகுபாகு முஸ்லிம் பெண் ஒருத்தியை திருமணம் செய்திருந்தான் என்பது பிரபலமான வரலாற்றுச் செய்தி. அந்தப்பெண்ணின் குழந்தையான வத்ஹிமி பண்டார பிற்காலத்தில் ஹஸ்த்திஸைலா புரம் தற்போது குருநாகல் என்று அழைக்கப்படுகின்ற இடத்தை ஆட்சிசெய்ததாக கூறப்படுகிறது.தம்பதெனிய யுகம் கி.பி.1220இல் ஆரம்பமாகின்றது.அது வத்ஹிமி விஜயபாகு அரசனின் காலமாகும்.இதுவோர் மிகப்பெரிய வரலாற்றுச் சான்று முஸ்லிம்கள் 1000 வருடங்களுக்கு முன்பு இங்கு வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதற்கு.


இவ்வாறு அன்று ஆட்சி செய்த அந்த அரசன் சதிகாரர்களால் கொல்லப்பட்டு அவனுடைய மண்ணறை இன்று வரை கலே பண்டார அவ்லியா என்ற பெயரில் முஸ்லிம் குடும்பம் ஒன்றின் தொடர்ச்சியான பராமரிப்பில் இருந்து வருகின்றது.

போர்த்துக்கேயர்கள் இந்த நாட்டை கைப்பற்றியபோது போர்த்துக்கேயரிடம் இருந்து மீட்கவேண்டும் என்ற கோசத்தோடு காதர்வாலா முஸ்லிம் படையணி ஒன்றை யாழ்ப்பாண மன்னன் ஒருவனின் யாழ்ப்பாண மன்னன் ஒருவனின் ஆதரவுடன் திரட்டி போர்த்துக்கேயருக்கு எதிராக போராட ஆயத்தமாகினர். இது இந்த நாட்டின் மீது முஸ்லிம்கள் வைத்திருந்த பற்றினை தெளிவுபடுத்துகின்றது.

ஜம்இய்யத்துல் உலமாவுக்கும், ஹலாலுக்கும் எதிரான நடவடிக்கைகள்,ஹிஜாப், பர்தாவுக்கு எதிரான பிரச்சாரங்கள், மஸ்ஜித்கள் உடைப்புஇ முஸ்லிம்களின் பொருளாதாரத்தை இலக்காகக் கொண்ட தாக்குதல்கள் போன்ற சுமார் 230 க்கும் மேற்பட்ட சம்பவங்களை ஆவணங்களோடு எனக்கு இங்கு குறிப்பிட்டுக் காட்ட முடியும்.

கடந்த மாதம் 15 ம் திகதி இந்த தொடரேட்சியான எதிர்புகளுக்கு ஒரு உச்ச கட்ட நிலையாக மனித வேட்டை ஒன்றையும் பொருளாதாரங்களை அழிவுக்குள்ளாக்குகின்றதும்இதீயிட்டு எரிப்பதுமான ஓர் கலவரம் ஒன்றினை மிக நுணுக்கமாக திட்டமிட்டு பொதுபலசேனா என்ற அமைப்பு நல் உள்ளம் கொண்ட சிங்கள சகோதரர்களை துவேச உணர்வுகளை ஊட்டி மத தீவிர வாத நச்சுக் கருத்துக்களின் ஊடாக அவர்களை உசுப்பேற்றி அளுத்கமஇபேருவளைஇதர்கா நகர் அதிகரிகொடஇமீராட்சிகந்த வெளிபிடியஇசீனவத்த போன்ற இடங்களில் அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிராக ஓர் இன வன்முறை மூட்டி விடப்பட்டது. இதில் ஓர் கவலையான விடயம் என்னவென்றால் ஊரடங்கு சட்டத்தினை முஸ்லிம்களுக்கு மாத்திரம் என்றவாறு அமுல்படுத்தி அவர்கள் எவரையும் எங்கு எங்கு அவர்கள் இருந்தார்களோ அவர்களை அங்கேயே முடக்கி வைத்து பொதுபலசேனா உறுப்பினர்களையும் தீவிரவாத செயல்களை செய்தவர்களையும் அவர்கள் விருப்பத்திற்கு வீதியில் நடமாட விட்டு அதனூடாக நிராயுத பாணியான முஸ்லிம்களுடைய உயிர்களையும்,உடமைகளையும் சேதமாக்கியமையாகும்.


இந்த பிரச்சினைக்கு பின்னணியிலே நாங்கள் பார்கின்ற போது சென்ற மாதம் பொசன் போயா தினத்தன்று ஓர் சிங்கள இனத்தை சேர்ந்த வேண் சாரதிக்கும்இஓர் முஸ்லிம் இளைஞருக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கம். வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் அந்த வேனிலே பிரயாணம் செய்த பௌத்த பிக்குக்கு அடித்ததாக கூறி பொதுபலசேனா மிகப்பெரும் வதந்தி ஒன்றை காட்டுத்தீபோல் பரவ வைத்தது. 

இதன் பிற்பாடு இதனை ஓர் சந்தர்ப்பமாக பயன்படுத்தி தாக்கப்பட்டதாக கூறப்படும் பௌத்த பிக்குவை வற்புறுத்தி முஸ்லிம் இளைஞருக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து குறிப்பிட்ட அந்த மத குருவினை அழுத்கம வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்குமாறு கேட்ட போது அங்கு கடமையில் இருந்த வைத்தியர் மதகுருவை பரிசோதித்து விட்டு இவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை இவரை அனுமதிக்க முடியாது என்று திருப்பி அனுப்பினார்.அதனை தொடர்ந்து தர்கா நகர் அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்க கொண்டு சென்ற போது அங்கிருந்தும் குறிப்பிட்ட மத குருவிற்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்று விடுதி அனுமதியை மறுத்து திருப்பி அனுப்பினார்கள். அதனை தொடர்ந்து நாகொட அரசினர் வைத்தியசாலையில் தீவிரப்போக்குடைய அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி வைத்தியசாலையில் அனுமதித்தார்கள். இதுவே இந்த பிரச்சினைக்குரிய மூல காரணமாக வெளி உலகிற்கு காண்பிக்கப்பட்டது.

இந்த பொய்யாக சோடிக்கப்பட்ட நிகழ்வினை எதிர்ப்பதற்கான ஒரு மாபெரும் ஊர்வலத்தினையும்இபொதுக்கூட்டம் ஒன்றினையும் பொதுபலசேனா நடத்தியது. அதிலே தன்னை பௌத்த பக்தனாக காட்டிக்கொள்ளும் நானசார தேரர் அவர்கள் இனத்துவேச நச்சுக்கருத்துக்களையும்இமிக மோசமான வார்த்தை பிரயோகங்களையும் அங்கு வெளியிட்டு குழுமி இருந்த மக்களை உணர்வூட்டி பெரும்பான்மை இன சிங்கள சகோதரர்களை வன்முறையின்பால் மதத்தின் பெயர் கொண்டு அழைத்தார். இவருடைய அன்றைய முழுப்பேச்சினையும் இணைய தளங்களில் நேரடியாக காணமுடியும். தன்னுடைய பேச்சினை முடிக்கும் போது முஸ்லிம்களுடைய வியாபாரம் என்பது நாசமாய் போகட்டும் அல்லது அழிந்து போகட்டும் என்று கூறினார்.


இதனை தொடர்ந்து உடனடியாக தர்கா நகரிலே இருந்த மின் உபகரனக்கடை தீக்கிரையாக்கப்பட்டது. இதிலே தொடர்ந்த இந்தக் கலவரம் 15 ம் திகதி 6.45 வரை தொடந்து கொண்டிருக்கையில் மாலை 6.45 மணிக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கத்தக்கதாக பொதுபலசேனா தீவிரவாத அமைப்பினுடைய உறுப்பினர்களும் ஏனைய தீவிரவாத சிந்தனை உடையவர்களும் முஸ்லிம்களுடைய வீடுகளையும் கடைகளையும் தீக்கிரை ஆக்கினார்கள்.அதுமட்டுமல்லாமல் அப்பாவி முஸ்லிம்களை கம்பிகளாலும்இகட்டைகளாலும் வாள்களாலும் அடித்தும்இவெட்டியும் காயப்படுத்தினார்கள். அதன் உயர்ந்த பட்சமாக பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி தாக்குதலில் இருவர் ஸ்தலத்தில் கொல்லப்பட்டார்கள்.


400 சிங்கள யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுத்திருந்த ஒரு முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான 

“GREATWAYS APPARAL”

என்ற ஆடைத்தொளிட்சாலை ஜூன் மாதம் 16 ஆம் திகதி காலை 11.15 மணிக்கு அந்த பிரதேசத்திலே இருக்கின்ற பௌத்த மதகுருவினுடைய தலைமையில் தீக்கிரையாக்கப்பட்டு 05 கோடிக்கு மேற்பட்ட சொத்தை அழித்து அப்பிரதேசத்திலே தொழில் வாய்பின் ஊடாக பயன் பெற்றிருந்த 500 க்கு மேற்பட்ட குடும்பத்தினுடைய வாழ்வாதாரத்தினை இல்லாமல் செய்தார்கள். எந்தவொரு யுத்த காலத்திலும் காயப்பட்டவன் எதிரியாக இருந்தாலும் கூட அவனுக்கு வைத்தியம் செய்வது யுத்த தர்மம் என்று சொல்லப்படுகின்ற வேளையில் மனிதாபிமானங்களின் சின்னங்களான வைத்தியர்கள் அப்பாவி 14 வயதுடைய முஸ்லிம் இளைஞனான முஹம்மது அஸ்கர் என்பவர் காலிலே ஏற்பட்ட காயத்துடன் நாகொட அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது தொடர்ச்சியாக நான்கு நாட்கள் அவருக்கு எந்த வைத்தியமும் செய்யாமல் விட்டதன் ஊடாக அவருடைய இளவயதிலேயே அவருடைய காலை இழக்க வேண்டிய மிக மோசமான மனித சமூகமே வெட்கப்படக்கூடிய அளவு ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.


இதுவரையில் ஒருபள்ளிவாயல் முற்றாக எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது.
இன்னுமோர் பள்ளி பகுதியளவில் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

48 வீடுகளில் பொருட்கள் கொள்ளையிடப்பட்டு வீடுகளும் முற்றாக தீக்கிகிரையாக்கப்பட்டுள்ளது.

60 வீடுகள் பகுதியளவில் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

66 வீடுகள் சிறிய சேதத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

39 கடைகள் கொள்ளையிடப்பட்டு முற்றாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

40 கடைகள் பகுதியளவில் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

88 பேர் காயங்களுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

08 பேர் சுடப்பட்டு இதில் இருவர் மரணமடைந்து இருக்கின்றார்கள்.

இரண்டு இளைஞர்களின் கால்கள் அகற்றப்பட்டு இருக்கின்றன.

மோட்டார் சைக்கிள்களும்இமுச்சக்கரவண்டிகளுமாக மொத்தம் 37 வாகனங்கள் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளது.

15 பெறுமதிமிக்க வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.


இதனடிப்படையில் 2500 மில்லியன் அதாவது 250 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட சொத்துக்கள் அழித்து நாசமாக்கப்பட்டுள்ளது.


இவ்வாறான வன்முறைகளையும் வன்செயல்களை தூண்டுகின்றவர்களையும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.இந்த நாட்டினுடைய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்னையும் குலைக்க முற்படுகின்ற பொதுபலசேனா போன்ற தீவிர வாத அமைப்புக்களை உடனடியாக இந்த நாட்டில் இருந்து தடை செய்ய வேண்டும். தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.


1400 வருடங்களுக்கு முன் இறைவனால் அருளப்பட்ட திருக்குர்ஆனில் பிழை இருப்பதாக பொதுபலசேனாவினுடைய செயலாளர் நானசார தேரர் கூறுகின்றார் .பௌத்த மத போதனையையே நன்கு விளங்கத்தெரியாத இவர் இன்னுமோர் மதத்தினுடைய புனித நூலைப்பற்றி குறை கூற எந்த அருகதையும் அற்றவர். அன்பை போதிக்கும் பௌத்தத்தை நேசிப்பதாக கூறிக்கொண்டு மற்ற மனிதர்களுடைய இரத்தத்தை ஓட்டத்தூண்டுகின்ற இவர் போன்றவர்கள் பௌத்தத்தை பேசுவதற்கு எந்த தகுதியும் அற்றவர்கள். அவ்வாறு இருக்கையில் ஒரு உண்மையான புனித குர்ஆனைப்பற்றி பேசுவதற்கு இவர் எந்த வகையிலும் தகுதியானவர் அல்ல. இவரை விட பெரும் பெரும் அரபு இலக்கிய வாதிகள் பேராசிரியர்கள்இகலாநிதிகள் என்று எத்தனையோ இலட்சக்கணக்கானவர்கள் இன்று வரைக்கும் இந்த திருக்குர்ஆனிலே குறை கண்டு கொள்வதற்கும் அதனை பொய்ப்பிட்பதட்கும் முயன்று தோற்றுப்போய்க்கொண்டிருக்கின்றார்கள்.


கடந்த 15ம் திகதி நடந்த மிக அகோரமான தீவிரவாத செயலை பார்க்கும் போது இந்நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக இன்னுமோர் 1983 ஜூலை கலவரத்தை உருவாக்க எத்தணிப்பது போல் இருக்கின்றது. ஜூலை கலவரத்திற்கு அன்று இருந்த அரசாங்கம் நிச்சயம் இன்று வரை பொறுப்புக்கூற தவறியிருக்கின்றது. இதே ஒரு பலிச்சொல் அந்த 1983இல் உருவாகிய கொடிய யுத்தத்தை வென்ற இந்த அரசுக்கு ஏற்பட இடமளிக்கக்கூடாது.தீவிரவாதம் என்பது இந்த நாட்டில் இருந்து முற்றாக களையப்படவேண்டும். இந்த நாடு அபிவிருத்தியை நோக்கி முன்னேற வேண்டும்இஅதற்குண்டான எல்லா நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்க வேண்டுமே அன்றி இவ்வாறான இனங்களுக்கிடையில் முறுகல்களை ஏற்படுத்துகின்ற அமைப்புகளை எந்த வகையிலும் ஆதரித்து விடாமல் அவர்களை உடனடியாக தடைசெய்ய வேண்டும்.


இவ்வளவு அநீதிகளையும் முஸ்லிம்களுக்கு எதிராக இவர்கள் தொடர்ச்சியாக இழைத்துக் கொண்டிருக்கின்ற போதிலும் முஸ்லிம்கள் மிகப் பொறுமையாகவும் நிதானமாகவும் இருப்பதன் நோக்கம் அவர்கள் கோளைகள் என்று அர்த்தம் அல்ல. அதற்கு பதிலாக அவர்கள் ஓர் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு இஸ்லாமிய போதனைகளை பின்பற்றுவதால் மாத்திரம் தான்.இதற்கு உதாரணமாக அவர்கள் பின்பற்றும் குர்ஆனிலும்இநபி முஹம்மத் (ஸல்) (அலை) அவர்களின் போதனையிலும் பின்வருமாறு வழிகாட்டப்படுகின்றார்கள் “

முஸ்லிம்களுக்கு இன்று இளைக்கப்பட்டிருக்கின்ற இந்த அநீதிக்கு எதிராக நாங்கள் பொறுமை காக்கின்றோம். ஏனெனில் எந்தப்புனித குர்ஆனை வழிகாட்டியாக நாங்கள் கொண்டிருக்கின்றோமோ அதே குர்ஆன் பொறுமை காக்கச்சொல்கின்றது.பொறுமையாளர்களுடன் இறைவன் இருக்கின்றான் என்ற ஓர் சத்தியத்தையும் எடுத்தியம்புகின்றது.


ஆகவே முஸ்லிம்களுக்கு இவ்வளவு பெரிய அநீதி இளைக்கப்பட்டும் அவர்கள் பொறுமை காக்கின்றார்கள் என்றால் அவர்கள் கோழைகள் என்று அர்த்தம் அல்ல.இறைவனின் கட்டளைக்கு அடிபணிகின்றார்கள் என்றுதான் அர்த்தம்.இந்த தீவிரவாத செயல்களை செய்தவர்களை அழித்தொளிக்குமாறு எந்தவோர் உண்மை முஸ்லிமும் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய மாட்டான். ஏனெனில் முஸ்லிம்களுடைய தலைவரும் வழிகாட்டியுமான முகம்மது நபி (ஸல்) (அலை) அவர்கள் வெளிக்காட்டவில்லை.

என்றாலும் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஓர் கண்டனப் பிரேரணையை இந்த சபை நிறைவேற்ற வேண்டும். அதநூடாக எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :