இந்த இரு விடயங்களில் எந்த முஸ்லிம் தலைவரும் பங்களிப்புச் செய்யவில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றுஞ் சாட்டியுள்ளார்.
அளுத்கம சம்பவத்தின் பின்னணியில் பெளத்த பயங்கரவாத குழுவே உள்ளது என்ற ஒரு தோற்றப்பாட்டினை இன்று சர்வசே சமூகத்தின் மத்தியில் உருவாக்க மேற்கொள்ளப்டும் முயற்சிகள் குறித்து நாம் மனவேதனையடைகிறோம்.
எந்த பௌத்த அமைப்பும் முஸ்லிம்களுக்கு எதிரானவைகள் அல்ல என்பதனை நான் மிகுந்த பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாட்டில் வாழக் கூடிய முஸ்லிம்களுக்கு உள்ள சுதந்திரம், உரிமைகள், அமைதியான வாழ்க்கை வேறு நாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழில் சுருக்கம்: ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
சிங்கள மூலம் :லங்கா சீ நியுஸ்

0 comments :
Post a Comment