தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வு 25.07.2014 ந்திகதி வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணிக்குஅக்கறைப்பற்று மாநகர சபை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகள், மத்திய அரசாங்க, மாகாண அதிகாரிகள், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாநகர சபை மேயர், மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளுர் அரசியல் தலைவர்கள், உலமாக்கள், ஊர்ப்பிரமுகர்கள், நம்பிக்கையாளர் சபைத் தலைவர்கள், பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்கள், கல்விமான்கள், தொண்டர்கள், தோழர்கள், அன்பர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இதில் கலந்து கொணடு சிறப்பிக்கவுள்ளனர்

0 comments :
Post a Comment