பழுலுல்லாஹ் பர்ஹான்-
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் அதன் உறுப்பினர்களுக்கு றமழான் அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் ஆரம்ப நிகழ்வு 23-07-2014 நேற்று புதன்கிழமை மாலை காத்தான்குடியிலுள்ள மட்டு-மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளன தலைவரின் இல்லத்தில் இடம்பெற்றது. மட்டு-மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் செயலாளர் ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளன உறுப்பினர்களுக்கு றமழான் அன்பளிப்புக்களை மட்டு-மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான் வழங்கி வைத்தார்.
மட்டக்களப்பு-ஓட்டமாவடி அல் -கிம்மா நிறுவனத்தின் அனுசரனையில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் வழங்கப்படுகின்ற றமழான் அன்பளிப்புக்கள் பிரதேசம் ரீதியாக முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் செயலாளர் ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரீஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தில் காத்தான்குடி,ஏறாவூர்,கல்குடா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம் ஆண்,பெண் ஊடகவியலாளர்கள் அங்கத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

.jpg)
0 comments :
Post a Comment