தமிழ் மக்கள் விதலைப் புலிகள் கட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டாலும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இணையவில்லை என ஜனாதிபதியின் ஆலோசகரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
எமது மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்காகவே நாங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளராக செயற்படுகின்றோம். இந்த விடயத்தில் மக்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.செங்கலடி பிரதேச செயலாளர் இடமாற்றத்துக்கெதிரான ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்!
“செங்கலடி பிரதேச செயலாளர் இடமாற்றமானது தற்போதைய காலத்துக்குத் தேவையற்றது. இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு நான் நன்றி கூறுகின்றேன். உண்மையிலேயே மக்களுக்காகவே அதிகாரமும் அரசியலும் நிருவாகமும் இருக்கிறது. அந்த அடிப்படையில் முறையற்ற இடமாற்றத்தை எதிர்த்து மக்கள் ஒன்று கூடியுள்ளதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
தயாபரன் அவர்கள் பிரதேச செயலாளராகுவதும், உதயஸ்ரீதர் அவர்கள் போவதும் எங்களுக்கு பிரச்சினை இல்லை. உதயஸ்ரீதர் குறுகிய காலத்தில் செங்கலடி பிரதேச செயலகத்தைப் பொறுப்பேற்றவர். மக்களுக்கு முடிந்தவரை சேவையாற்றியுள்ளார். இந்த பகுதியின் அபிவிருத்திக் குழு தலைவர் என்ற அடிப்படையில் எம்மோடும் இணைந்து சேவையாற்றியுள்ளார்.
செங்கலடி பிரதேச செயலகத்தைப் பொறுத்தவரை குழப்பமான சூழ்நிலையோ அரச நிருவாகத்திற்கு எதிரான செயல்களோ நடைபெறவில்லை. இந்த சூழ்நிலையில் பிரதேச செயலாளர் இடமாற்றம் திடீரென வந்துள்ளது எல்லோருக்கும் கவலையளிக்கிறது.
இந்த இடமாற்றமானது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதன் காரணமாக மக்கள் இங்கு ஒன்று கூடியுள்ளார்கள். இந்த எதிர்பை நாங்கள் அரசாங்கத்திடம் கூறியுள்ளளோம். இது தொடர்பாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிடம் இது தேலையில்லாத இடமாற்ற என தொலைபேசியூடாக தெரிவித்தேன்.பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரிடமும் தொடர்பு கொண்டு உதயஸ்ரீதர் இங்கே இருக்கட்டும் புதிதாக வந்தவரை கச்சேரியில் இணைத்து வையுங்கள் என கூறியுள்ளேன்.
அன்பர்ந்த மக்களே நீங்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த இடமாற்றத்திற்கு பின்புலத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அருண் தம்பிமுத்து இருப்பதாக கூறப்படுகிறது. தாங்களும் அரசாங்கத்துடன் இருக்கிறோம் எங்களையெல்லாம் துர்துக்கொண்டு அவர்கள் அரசியலுக்கு வருவதற்கான முன்முயற்சியாக இவற்றை செய்கிறார்கள் போல் தெரிகிறது.
எமது மக்களின் பொருளாதாரம் அபிவிருத்தி போன்றவற்றிற்காக அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறோம். ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணையவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் பங்களார்களாக அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறோம்.
மக்கள் இந்த விடயத்தில் தெளிவாக இருக்க வேண்டும். இங்கு வரும் அருண் தம்பிமுத்து என்றாலும் சரி பிரதி தலைவர் என்றாலும் சரி இவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி வந்தார்கள். அவர்கள் தங்களது கட்சியை கட்டியெழுப்புவதற்காகவே இங்கு வருகிறார்கள். இவர்களுக்கு மக்கள் இடமளிக்க கூடாது. இவர்களுக்கு வால் பிடிக்கிறனர். கை சின்னதுக்கு மாறுங்கள் என்று சொல்பவர்களுக்கு பின்னால் மக்கள் செல்லக் கூடாது” என்றார்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment