சமூக ஊடகங்கள் :- வாய்ப்புக்களும் சர்ச்சைகளும்

எப்.எச்.ஏ. ஷிப்லி
விரிவுரையாளர்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்
ஒலுவில்

ண்மைக்காலமாக இலங்கையில் புதுவகையான போக்கு ஒன்றை அவதானிக்க முடிகிறது. அதாவது சமூக ஊடகமொன்றில் பதிவொன்றை இட்டுவிட்டு தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் கடந்த சி மாத காலப்பகுதிக்குள் மூன்றை தொட்டுவிட்டது.இதில் இரண்டு சம்பவங்களில் தற்கொலை செய்தவர்கள் பல்கலைக்கழக மாணவர்களாக இனங்காட்டப்பட்டுள்ளனர். இச்சம்பவங்களையும், ஏனைய நிகழ்வுகளையும் 

முன்வைத்து இக்கட்டுரை எழுதப்படுகிறது.

மனிதர்களின் நாளாந்த வாழ்க்கைக்கும் ஊடகங்களுக்கும் இடையில் நெருங்கிய உறவு தொடர்ச்சியாக இருந்துவருவதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆரம்ப காலங்களில் வாய்மொழி ஊடகங்கள், பின்னர் அச்சு ஊடகங்கள், மின்னணு ஊடகங்கள் என்று படிப்படியாக வளர்ச்சிகண்டு தகவல் தொழிநுட்பத்தின் அபரிதமான முன்னேற்றமும் இணையத்தளங்களின் ஆக்கிரமிப்பும் இன்று சமூக ஊடகங்கள் எனும் தாரக மந்திரத்தின் வழியே தகவல் பரிமாற்றத்தின் எல்லைகளை விரிவுபடுத்தி உலகின் எல்லா நடப்பு விவகாரங்களையும் உடனுக்குடன் பகிர்ந்தும், அறிந்தும் உலகை உள்ளங்கைக்குள் வைத்திருக்கக்கூடிய புதிய போக்கு மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இத்தகைய சமூக ஊடகங்களின் தொழினுட்பம் சார்ந்த வளர்ச்சியும், சிந்தனை, கருத்துரிமை நிலை சார்ந்த வளர்ச்சியும் பல்வேறு சாதக பாதகங்களையும். வெவ்வேறுபட்ட விமர்சனங்களையும் 
சந்திதுவருவதை அவதானிக்க முடியும்.

சமூக ஊடகங்களானவை ஒருவருடைய கருத்தை அவரது கோணத்தில், அவரது பார்வையில் போதிய விளக்கத்துடன் பதிவு செய்வதில்  முன்னணியில் இருக்கிறது . உலகில் எந்த ஒரு சம்பவம் நிகழ்ந்தாலும்  உடனடியாய் அதற்கு ஒரு பாராட்டு/ எதிர்வினை வர்ணனைகளுடன்  பதிவுகள் இடுவதில் நேரடி ஒளிபரப்பு ஊடகங்களையும் தாண்டி  முக்கியத்துவம் பெறுகின்றன. 


இணையத்தின் உபயோகம் சமூகத்தின் பல்வேறு தாக்கங்களிலும்  ஊடுருவிக் கொண்டிருக்கும் அதேநேரம் நாளுக்கு நாள் பல்வேறுபட்ட  புதிய சேவைகள் இணையத்தில் அறிமுகமாகின்றன. இவ்வகையில்  இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் இணையத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர்  எண்ணக்கருவாக சமூக வலைப்பின்னல் சேவைகளை நோக்க  முடியும். அன்று முதல் சமூக வலைப்பின்னல் சேவைகளை வழங்கும்  பல்வேறு இணையத் தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகின்றன.  இவ்வண்ணம் இன்று நடைமுறையிலுள்ள சமூக வலைப்பின்னல் தளங்களில்  பிரபலமானவை Facebook, Twitter, LinkedIn, Google+, Hi5, Orkut, DoozyFive, Flickr, Instagram   போன்றனவாகும்.

இவையனைத்திலும் மிகவும் பிரபலமானதும் பெருந்தொகையினரால்  பயன்படுத்தப்படுவதுமான சமூக வலைப்பின்னல் தளம் FACEBOOK ஆகும்.  2004 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட FACEBOOK  இணையத்தளம் இன்று சுமார் 1.28 பில்லியனிற்கும் மேற்பட்ட பாவனையாளர்களைக் கொண்டதாக விளங்குகின்றது. சிறுவர்கள் முதல் வயோதிபர்கள் வரை FACEBOOK என்ற சொல்லைக் கேட்டிராத எவரும் இருக்கமாட்டார்கள் என்று கூறுமளவுக்கு அது பிரபலம் வாய்ந்ததாகவும் புதிய தலைமுறையினரின் வாழ்வுடன் ஒன்றிணைந்ததாகவும் காணப்படுகின்றது. (அஸாம் பின் ஹம்ஸா )

இத்தகைய சமூக வலைத்தளங்களின் புதிய பரிணாமமே சமூக ஊடகங்கள்  எனும் சொல்லாடலாக இன்றைய காலகட்டத்தில் பிரபலமடைந்திருக்கிறது. சமூக வலைத்தளங்களின் ஊடாக செய்திப்பரிமாற்றம் அதிக அளவில்  ஊடாடிக்கொண்டிருப்பதால் சமூக வலைத்தளங்கள் இன்றைய திகதியில் அதிக வாசகர்கள் வாசிக்கக்கூடிய ஊடகமாக மிளிர்ந்து கொண்டிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக சமூக ஊடகங்கள் மூலமான புரட்சிகள் பற்றி  நிறைய சம்பவங்களை முன்வைக்க முடியும். அமெரிக்காவில் நடந்த தேர்தல் பிரச்சாரம், எகிப்து நாட்டில் நடந்த எழுச்சி போன்றவற்றில் இவற்றின் பங்களிப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அதே நேரத்தில் இச் சமூக ஊடகங்கள் நன்மைகள்/ தீமைகள் என இரண்டு பக்கங்களைக் கொண்டதாக  இருப்பதையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும். இதன் வாய்ப்புக்கள் எவ்வளவு தூரம் பாராட்டப்படுகிறதோ அதே அளவு சர்ச்சைகளுக்கும்  பஞ்சமில்லாத வகையில் இச்சமூக ஊடகங்களை நோக்கமுடியும்.

அந்தவகையில்  Gihani De Silva மற்றும் P.A.B. Danushika Peliarachchi ஆகியோர்கள் மேற்கொண்ட ஓர் ஆய்வின் பிரகாரம் இலங்கையில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் இளையோர்களில் 92% ஆனோர் அறிமுகமில்லாத நபர்களுடன் நட்பாடுவது கண்டறியப்பட்டுள்ளது.இது பல்வேறு சமூக சிக்கல்களுக்கு வழிகோலும் என்பதில் ஐயமில்லை.போலி முகப்புத்தக கணக்குகளை தவிர்த்துப்பார்க்கும் போது இலங்கையில் 2,300,000 பாவனையாளர்கள் இருக்கிறார்கள். ஆம் இலங்கயின் மொத்த சனத்தொகையின் 11.5% ஆனோர் முகப்புத்தகத்தினை உபயோகிக்கிறார்கள். 

அவற்றில் 1,400,000 ஆண்களும் 720,000 பெண்களும் அடங்குவர். 25 வயதிற்கும் 34 வயதிற்க்கும் இடைப்பட்டோர் இம்முகப்புத்தகப் பாவனையாளர்களின் மொத்தத்தில் 33மூ இனை நிரப்புகின்றனர்.ஒரு நாளுக்கு ஒரு இலங்கையர் எவ்வளவு நேரம் முகப்புத்தகத்தோடு செலவிடுகிறான் என்பதை பற்றி துல்லியமான தகவல்கள் கிடைக்கவில்லை ஆனாலும் அண்ணளவாக 34 நிமிடங்கள் செலவளிக்கின்றார். கைத்தொலைபேசி இன் வருகையுடன் முகப்புத்தக பாவனை மேலும் அதிகரித்துள்ளது.1.300.000 முகப்புத்தக கணக்குகள் கைத்தொலைபேசியூடாகவே அணுகப்படுகின்றன. (ரகுபரன்இசமூக ஊடகங்களில் இலங்கையர்)இவ்வாறாக முகநூல் பயன்பாட்டிற்கான காரணத்தைக் கேட்டறிந்த போது மாணவ மாணவிகளின் விடைகள்: பள்ளி, கல்லூரி நண்பர்கள்,வகுப்புத்தோழர்களுடன் தொடர்பில் இருக்க, பல தகவல்களை அறிந்து அவற்றைப் பரிமாறிக் கொள்ள என்பவையே முதன்மையான நோக்கங்களாக இருந்தன. சில மாணவர்கள் கல்வி கற்பதற்காகப் பயன் படுத்துவதாகக் கருத்துத் தெரிவித்தனர்.


இவ்விணையத் தளத்தில் திரைப்படம், அரசியல், தொழில்நுட்பம், வணிகம்,கல்வி என அனைத்துத் தகவல்களும் பதிவேற்றம் செய்யப்பட்டு பறிமாறிக் கொள்ளப்படுகின்றன. மாணவர்களின் ரசனைக் கேற்பத் தகவல்களைத் தேர்ந்தெடுத்துப் பரிமாறுகின்றனர். இந்த தகவல்கள் பரிமாற்ற அவர்களின் profile updation பற்றியச் செய்திகள் ( news feed) உடனடியாக நண்பர்களின் முகநூல் கணக்கில் கிடைக்கப் பெறுவதால்,நண்பர்களுடன் கல்லூரிக் காலத்திற்குப் பிறகும் தொடர்பில் இருப்பதாகக் கருதுகிறார்கள்.

ஷ முகநூல் முகவரி எங்களது தனிப்பட்ட அடையாளம், எங்களை விளம்பரப்படுத்திக்கொள்ள ஏதுவான எங்களுக்கான தொடர்பியல் தளம் (space) என்றும் அவர்கள் கூறுகிறார்கள். வெட்டி அரட்டை மற்றும் அல்லாது அன்றாடச் செய்திகளை அறியவும், கல்வி, பாடம் தொடர்பான, மேலை நாட்டில் பயில்வதற்கான Scholarship உள்ளிட்ட தகவல்களைப் பெறவும் முகநூல் உதவுகிறது என்பது அவர்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது.


~ Facebook Games / Application Downloadபோன்ற பொழுதுபோக்குச் செயல்பாடுகளில் சென்னை மாணவர்கள் அதிகம் ஈடுபடுவதாக அவர்களின் விடைகளில் இருந்து தெரியவந்தது.(தென் மாவட்டங்களின் மாணவர்களை விட சென்னை மாநகரில் இருக்கும் தொழில்நுட்பம்,கலாசாரம் போன்றவை இவற்றுக்கான காரணிகளாக இருக்கலாம்.)

புகைப்படம் பகிர்தல் என்பது (photo sharing) ஒரு முக்கியமான முகநூல் செயல்பாடாக (Activity)  உள்ளது. கல்லூரியின் பல்வேறு துறைகளில்  நடைபெறும் விழாக்களில், கல்லூரிச் சுற்றுலாவில் நண்பர்களுடன் எடுத்த 
கைப்படங்களை அவற்றுக்கு like, commentசெய்வதில் பெரு மகிழ்ச்சி அடைவதாக அவர்கள் கூறினார்கள்.நம் தலைவர்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பது பற்றி நன்கு அறிந்தவர்களாக ஜனங்கள் இருக்கிறார்கள், மேலும் சட்டங்களும், செயல் திட்டங்களும் எவ்வாறு தம்மைப் பாதிக்கக்கூடிய வகையில் இயற்றப்பட்டு உள்ளன இஎன்பது பற்றியும் ஜனங்கள் தம்முள் பகிர்கிறார்கள். மூடிய கதவுகளுக்குப் பின்னால் பல மாதங்கள் வரையில் பிரஜைகள் அறியா வகையில் அரசாங்கம் சட்ட திட்டங்களை வெளிக் கொண்டு வரும் நாட்களின்று இல்லை. 

சமூக ஊடகத்திற்கு நன்றி,அரசியல் சம்பந்தமான பிரச்னைகள், கருத்துக்கள் யாவற்றையும் பற்றிய விவாதங்கள்,பரவலாகவும்,உடனுக்குடன் இடம் பெறுவதாகவும் உள்ளது.பிற ஊடகங்களைப் போல் சமூக ஊடகமும் மிகுந்த பொறுப்புடனும் செயல்படுதல் வேண்டும்.இல்லையேல், இச் சமூகத்திற்கு பெரும் சேதம் விளையும். 2011-ல் லண்டன் கலகத்தில் , சொத்துக்களுக்குத் தீ வைத்துச் சேதமுண்டாக்கக் கூடிய தம் தாக்குதலை சமூக ஊடகத்தைப் பயன்படுத்தியே மேற்கொண்டனர்.சமீபத்தில் இந்தியாவிலும்,சமூக ஊடகத்தைப் பயன்படுத்தியே , வட கிழக்கு மாகாண மக்கள் , பெங்களூர் ,ஹைதராபாத் வாழ்வோரிடையே பயத்தினை உண்டாக்குவதன் மூலம் அவர்தம் சொந்த இடங்களுக்கு பெரும் ஜனத்திரளை வெளியேற்றம் செய்தனர்.

மனிதர்களை ஒன்று சேர்க்க வல்ல தன்னுடைய மாபெரும் சக்தியால் சமூக ஊடகமானது பெரும் சமூக மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய ஓர் உபகரணமாக உறுதியளிக்கிறது.சமீபத்தில் சமூக ஊடகம் நிகழ்த்திய வெற்றிகரமான எதிர்ப்புகளின் வாயிலாக சரியான மாற்றங்கள் நிகழ்ந்ததைப் பார்த்தோம்.சமூக ஊடகத்தின் மற்றொரு பிரயோகிப்பு,இந்தியாவில் உபயோகிக்கப் படாமல் மிகப் பெரும் அளவில் பரந்து விரிந்து கிடக்கும்சக்தியைத் தட்டி எழுப்பி, உபயோகப்படுத்துவது .உதாரணமாக , 'இந்தியநாடு மேன்மை பெற தன்னார்வத் தொண்டரின் பங்கு' - இயக்கத்தில் , எவரேனும்,ஏதேனும் ஓர் இடத்தில் மருத்துவ முகாம் என அறிவித்தால் அத்தேதியில் மற்றோரும் அங்கு கூடி பங்கு ஏற்பர்.( ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்)இணையத்தில் தொழில் நிமித்தமாகவோ, பொறுப்புடன் எழுதுவதாக காட்டிக் கொள்ளும் பிரபலங்கள் பலரும் கூட வாசிப்போருக்கு நன்மை பயக்கும் வண்ணம் எழுத முற்படுவதில்லை. பலரும் பணம் செய்யும் உத்தியாகவும் தனி மனித சுய விளம்பரங்களுக்காகவும் தாம் நம்பும் கொள்கைகள்,மதங்கள், சாதியங்கள் ,கோட்பாடுகளை பிறர் மீது திணிக்கும் வாய்ப்பாகவுமே இணையத்தை கருதுகின்றார்கள்.

இத்தகைய லட்சக் கணக்கான கருத்துக் குவிப்புக்கள் மத்தியில் இவற்றை எல்லாம் எவ்வாறு தரம் பிரித்து நுகர்வது என்பதில் நமக்கு பல சிக்கல்கள் எழவே செய்கின்றனர். இவற்றை நல்ல முறையில் பயன்படுத்துவது குறித்த போதிய விழிப்புணர்வுகள் நம்மவர்களில் மிகக் குறைவே எனலாம்.வாசகர்கள் வாசிப்பதன் ஊடாக பேரானந்தம் பெறவும்,அறிவூட்டல்கள் அடையவும், சிந்தனை வளம் பெருகவும் அவர் தம் வாழ்வில் இம்மியளவேனும் மாற்றங்களை பெறவும் வேண்டும் என்ற எண்ணத்துடன் இணையத்தை இயக்குவோர் மிக மிகக் குறைவே எனலாம். போலிகளையும்,பக்கச்சார்புகளையும், பொறுப்பற்ற பகிர்வுகளையும் இணையம் உள்வாங்கி இருப்பதனால் ஒவ்வொரு வாசகர்களும் தமக்கு எவை உகந்தவை, எவை எல்லாம் உதவாதவை என்பதை ஆய்ந்து சுய தணிக்கை செய்து கொள்வதன் அவசியம் இன்றியமையாத ஒன்றாகும்.

ஏனெனில் இன்று சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்துவோர் பலருக்கும் ஒருவித உளவியல் அழுத்தம் காணப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. 
அனைத்தையும் தவற விட்டு விடக் கூடாது என்பதில் பலரும் அதிக அக்கறை செலுத்துவதால் ஒரு வித மன பதற்றம் பலருக்கும் ஏற்பட்டு இணைய சமூக ஊடகங்களில் மூழ்கிப் போய் கிடக்கின்றனராம். சமூக ஊடகங்களில் கொட்டிக் கிடக்கும் பல தெரிவுகளும், அது கொடுக்கும் ஒருவித கர்வ எழுச்சியும், மகிழ்ச்சியும் பாராட்டுக்களும், விமர்சனங்களும் நம்மை அதில் கட்டிப் போட்டு வைத்துள்ளது.

இன்று பலருக்கும் இணையத்தில் ஒரு பயன் மிக்க கட்டுரையை ஆழமாக வாசிக்கவோ, காட்சிப் பதிவுகளை பொறுமையாக கவனிக்கவோ,இரசிக்கவோ இயலாமல் போய்விட்டது. ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு கண நொடிப் பொழுதில் தாவிக் கொண்டே உள்ளார்கள். இவ்வாறு தாவும் மனப்பான்மையை உளவியலாளர்கள் FOMO ( Fear Of Missing Out )எனக் கூறுகின்றார்கள். 

சுமார் 56வீதமாநோருக்கு இத்தகைய பதற்றமும், குழப்பமும் தாவும் மனப்பான்மையும் மிகுந்து காணப்படுவதாக ஓர் அறிக்கை தெரிவிக்கின்றது. (கோடங்கி)எது எவ்வாறாயினும் சமூக ஊடகங்கள் என்பது ஏராளமான சாதகங்களைக்கொண்டிருந்தாலும் இன்றைய இளைஞர், யுவதிகளின் பயன்பாடுகளை உற்று நோக்கும்போது அது தவறான பல வழிகளில் கையாளப்படுவதை அவதானிக்கலாம். எனவேதான் பாலில் கலந்திருக்கும் நீரை விடுத்ததுஇ பாலை மட்டும் அருந்தும் அன்னம்போல நாமும் சமூக ஊடகங்களின் சாதக பக்கங்களை பயன்படுத்துவதன் மூலம் சமூக ஸ்திரத்தன்மைக்கு வழிகோல முடியும்.


எப்.எச்.ஏ. ஷிப்லி
விரிவுரையாளர்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்
ஒலுவில்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :