மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் வரட்சி காரணமாக வாழைச்சேனை ஓட்டமாவடி கிரான் ஆகிய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வாகனேரிக் குளத்தை அண்மித்த பேரில்லாவெளிக் கண்ட வயல் நிலங்கள் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்திலுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
பொத்தானை, ஆத்துச்சேனை, மயிலந்தனை, அக்குராணை மற்றும் களுவாமடு ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் ஐயாயிரம் ஏக்கர் வயல் நிலங்களே இவ்வாறு வரட்சியின் காரணமாக பாதிப்புக்குள்ளாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை மாதுறுஓயா கங்கையில் இருந்து வாகனேரிக் குளத்தை அண்மித்த வயல் நிலங்களுக்கான நீர்பாசன வசதிகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் நெற்செய்கை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

0 comments :
Post a Comment