சுதந்திர காற்றை பூரணமாக சுவாசிக்க விடுங்கள் - மாகாண சபையில் நஸீர் MPC சீற்றம்.

பைஷல் இஸ்மாயில் -

அண்மைக்காலமாக இந்நாட்டு முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியில் இனவாத உணர்வுகளை தூண்டி சிங்கள முஸ்லிம் இனக்கலவரத்தை உருவாக்க முயற்சி செய்து வரும் பொதுபல சேனாவினதும், பேரினவாத குழுக்களினதும் கொடூரமான நடவடிக்கைகளை தொடர்ந்தும் பொறுமைகாக்க முடியாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் நேற்று முன்தினம் (15) இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வின்போது தெரிவித்தார்.

தவிசாளர் ஆரியவதி கலபதி தலைமையில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபையின் அமர்வின்போது முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களால் சபையில் கொண்டு வரப்பட்ட அளுத்கம, தர்கா நகர், வேருவளை சம்பவங்களை கண்டித்து பிரேரனையில் சமர்ப்பித்த பின் உரையாற்றியபோதே மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மிக கொடூரமான பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு இன்று நாட்டில் இனமத பேதமின்றி மக்கள் சுதந்திரமான காற்றை சுவாசித்து மிக அமைதியாக வாழ்ந்து வருகின்றார்கள் என்று அரசாங்கம் சொல்லிவரும் இந்நிலையில், பொதுபலசேனா அமைப்பில் உள்ளவர்கள் இந்த சுதந்திரமான காற்றை சுவாசித்து வாழ விடாமல் இனமதத்துக்குள் குழப்பத்தை உண்டுபன்னி வருகின்றனர்.

இலங்கை இராணுவத்தினர் தங்களின் கடமைகளை சரிவர செய்வதிலிருந்து தவறிவிட்டனர். ஏனென்றால் கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த அதிலும் கிழக்காசியாவில் மிகப் பலம் பொருந்திய எமது இலங்கை இராணுவத்தினர், அளுத்கம சம்பவம் தொடர்பில் தனது பாதுகாப்பு நடவடிக்கையில் தவறிவிட்டனர் என்றுதான் சொல்லவேண்டும். அன்று இலங்கை இராணுவதத்தினர் புலிகளை ஒழித்துக்கட்ட எவ்வாறு செயற்பட்டார்களோ அதேபோல் இன்றும் செயற்பட முன்வரவேண்டும்.

அளுத்கம, தர்கா நகர் பிரதேசங்களில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக பொதுபலசேனா அமைப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் மாத்திரம் தான் நமது நாட்டில் எதிர்காலத்தில் இனவாதத்தை இல்லாமல் செய்யலாம். இன்று சமாதானத்தை சீர் குலைப்பதற்கு நமது நாட்டில் இயங்கி வரும் பொதுபலசேன இயக்கம் முஸ்லிம் மக்களின் இருப்பிடங்ளை நோக்கியும், முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், உடமைகள், வர்த்தக நிலையங்கள் என்று ஆரம்பித்து முஸ்லிம் மக்களின் மனங்களை புண்படுத்தியும், கேவலப்படுத்தியும் கடந்த வருடங்களாக பல நடவடிக்கைகளை பொதுபலசேனா இயக்கத்தினர் மேற்கொண்டு வந்தனர்.

கடந்த மூன்று தசாப்த காலமாக நமது நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலையால் நமது முஸ்லிம் மக்கள் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டு அதில் ஏற்பட்ட வலி இன்னும் எம் மக்களின் மனங்களில் இருந்து அகல முடியாத இந்நிலைமையில், இந்த அளுத்கம - பேருவளை சம்பவத்தில் இடம்பெற்ற கொடூமைகளை பொறுமையுடன் தாங்கிக் கொண்டிருக்கும் முஸ்லிம் மக்கள் மீது மனிதாபிமானமற்ற முறையில் பொதுபலசேனா இயக்கத்தினர் தங்களின் காடைத் தனத்தை காட்டியுள்ளனர்.

இவ்வாறான இனவாத கருத்துடையவர்களின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளையும், தங்களின் பொருளாதாரத்தையும் சற்று உயர்த்துவதற்காகன நடவடிக்கைகளை இன்று நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும், சில அரசியல்வாதிகளின் தனிப்பட்ட உதவிகளினாலும், அரசாங்கத்தின் உதவியினாலும் சரி செய்ய முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த மக்களின் வீடுகளையும், பொருளாதாரத்தையும் காலப்போக்கில் சரிவரச் செய்துவிடலாம். ஆனால் அவர்கள் இழந்த உயிர்களை யாராலும் மீட்டுக் கொடுக்க முடியுமா? இந்த இழப்புக்கு யார் பதில் கூறுவார்கள் என்ற கேள்வியை மிக காத்திரமாக ஆவேசத்துடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் சபையில் கேட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :