ஹாசிப் யாஸீன்-
சாய்ந்தமருது பிரதேச செயலக திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மன்றத்தின் இப்தார் நிகழ்வு நேற்று (15) சாய்ந்தமருது மகாசங்க காரியாலய கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலக திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மன்றத்தின் தலைவர் யூ.எல்.ஜஃபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், முன்னாள் பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக், கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, நிர்வாக உத்தியோகத்தா் எம்.எம்.உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார், மாவட்ட திவிநெகும முகாமையாளர் ஏ.எம்.சலீம், சாய்ந்தமருது பிரதேச செயலக தலைமைக்காரியாலய சமுர்த்தி முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம், சமுர்த்தி மகா சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.றிபாயா, திட்ட முகாமையாளர் எம்.எஸ்.எம்.மனாஸ், திவிநெகும சமுதாய அடிப்படை வங்கி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.பர்ஹான், உதவி முகாமையாளர்களான எம்.யூ.ஹில்மி, எம்.எம்.எம்.முபாறக், ஏ.எம்.முஹம்மட் றியாத் உள்ளிட்ட முகாமையாளர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வங்கி, மகா சங்க கட்டுப்பாட்டுச் சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மார்க்க சொற்பொழிவினையும், துஆப் பிரார்த்தனையையும் மௌலவி முஹம்மது முஆப் இப்னு தௌபீக் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.சாய்ந்தமருது பிரதேச செயலக திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மன்றத்தின் செயலாளர் எம்.பீ.எம்.அன்லைஸ் அவர்களினால் நன்றி உரை நிகழ்த்தப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment