ஜனநாயக வழியில் எமது போராட்டங்களை நாம் வடிவமைக்க வேண்டும்.

அன்சார்-

லங்கையில் உள்ள மதத்தீவிரவாத, இனத்தீவிரவாத கும்பல்கள் ஏதோ ஒரு வடிவத்தில் சிறுபாண்மையினர் மீது அவர்களது விஷக்கருத்துக்களை கொப்பளித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். சிறுபாண்மையினர் எனும் போது இவர்களது முக்கிய இலக்காக இருப்பது முஸ்லிம்கள்தான். 

முஸ்லிம்களது ஆடை, கலாச்சாரம், மார்க்கம், அரசியல், வணக்கஸ்தலங்கள், மற்றும் ஹலால் போன்ற அத்தனை விடயங்களிலும் மூக்கை நுழைக்கின்றார்கள்.
இவர்களது விஷக்கருத்துக்கள் எத்தகைய வடிவில் இருந்தாலும் அதற்கெல்லாம் நாம் அடிபணிந்து, பயந்து கொண்டு கோழைத்தனமாக இருக்காமல் இலங்கை மக்களாகிய எமக்கு இருக்கும் ஜனநாயக ரீதியான உரிமைகளைப் பயன்படுத்தி இவர்களுக்கெதிராக நாம் ஜனநாயக வழியில் எமது போராட்டங்களை நாம் வடிவமைக்க வேண்டும்.

துஆ, தொழுகை, நோன்பு என்ற எமது ஆண்மீக ரீதியான போராட்டங்களில் மாத்திரம் எம்மை ஈடுபடுத்திக் கொண்டு செயற்படுவது எமது ஏழைத்தனம், இதனோடு சேர்த்து ஜனநாயக ரீதியாகவும் எமது போராட்டங்களை நாம் செய்ய வேண்டும். அப்படி நாம் அவர்களுக்கெதிராக ஜனநாயக வழியில் போராடும் போது எக்காரணம் கொண்டும் அவர்களது வணக்கஸ்தலங்களை, கடவுளர்களை, மதத்தை வசைபாடி கருத்துக்களை வெளியிடுவதையும் முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். முகநுாலில் ஒரு சில நம் சகோதரர்களது செயற்பாடுகள் இவ்வாறு இருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது இது தவிர்க்கப்பட வேண்டும். இல்லையேல் அவர்களுக்கும் எமக்கும் வித்தியாசம் இல்லாது போய்விடும்.

இன்று இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் பல இடங்களில் எதிர்ப்பு பேரணிகள் நடைபெறுகிறது, உண்மையில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. முஸ்லிம்களின் ஒன்றுமையை அது பிரதிபலிக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்....!!!! அதே ஒன்றுமையை எமது நாட்டிலும் முஸ்லிம்களாகிய நாம் பிரதிபலிக்க வேண்டும்.

நாம் முஸ்லிம்கள், சாந்தத்தை போதிக்கும் மார்க்கத்தில் வளர்க்கப்பட்டவர்கள் ஆகவே அமைதியைக் கடைப்பிடித்து ஜனநாயக ரீதியாக எமது போராட்டத்தை நாம் அனுக வேண்டும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :