அளுத்கம வன்முறையும், முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால​​​​மும்- ​தேசிய ஷூறா சபை


தேசிய ஷூறா சபையின் முதலாவது ஆலோசனை மன்றம் கடந்த சனிக்கிழமை, ஜூலை 12 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6.30 மணி (இப்தார்) வரை கொழும்பு 06, MICH மண்டபத்தில், தேசிய ஷூறா சபையின் தலைவர் அல்ஹாஜ் தாரிக் மஹ்மூத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 
 
சமூகத்தின் முக்கியஸ்தர்களை அழைத்து அவர்களுடன் திறந்த கலந்துரையாடல்களை  நடாத்தி, அவர்களின் கருத்துக்களையும் சிந்தனைகளையும் பகிர்ந்துகொள்வதன் மூலம் தேசிய ஷூறா சபைக்கும், அதன் அங்கத்துவ அமைப்புகளுக்கும், முஸ்லிம் சமூகத்திற்கும் பயன் கிட்டும் என்ற  நோக்கிலேயே இந்த ஆலோசனை மன்றம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. 

 
​இடமிருந்து: தேசிய ஷூறா சபையின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான அல்ஹாஜ் டீ.கே. அஸூர் (பிரதித் தலைவர்), அஷ்-ஷேய்க் எஸ்.எச்.எம். பழீல் (பிரதித் தலைவர்), அல்ஹாஜ் தாரிக் மஹ்மூத் (தலைவர்), அஷ்-ஷேய்க் எம்.எஸ்.எம் தாஸிம் (பொருளாளர்), அல்ஹாஜ் ஜாவித் யூஸுப் (ஊடகப்பேச்சாளர்), ஜனாதிபதி சட்டத்தரணி அல்ஹாஜ் எம்.எம் சுஹைர்  (பிரதித் தலைவர்) 
 
இவ் அங்குரார்ப்பண ஆலோசனை மன்றம் “அளுத்கம வன்முறையும், முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலமும்’ என்ற தொனிப்பொருளில், விரிவான கருத்துப் பகிர்விற்கு களம் அமைத்திருந்தது.
 
புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்கள், தேசிய ஷூறா சபையின் அங்கத்துவ அமைப்புகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அதன் பொதுச் சபை, நிறைவேற்றுக்குழு, மற்றும் செயலக உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமது பெறுமதியான கருத்துகளையும், ஆலோசனைகளையும் பரிமாறிக் கொண்டனர். அளுத்கம பிரதேசத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
 

இடமிருந்து: அல்ஹாஜ் எம். இப்ராஹீம் (பொதுச்சபை அங்கத்தவர்), அஷ்-ஷேய்க் எம்.எம் ஏ முபாரக் (பொதுச்செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா), முன்னாள் ஜனாதிபதி சட்டத்தரணி அல்ஹாஜ் ஷிப்லி அஸீஸ், ஜனாதிபதி சட்டத்தரணி அல்ஹாஜ் பாயிஸ் முஸ்தபா, சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ் (தலைவர், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி), பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப் மற்றும் வைத்திய நிபுணர் எம். அன்வர் ஆகியோர் அமர்ந்திருப்பதைக் காணலாம்.  
 
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட மேற்படி முன்மொழிவுகள் தொகுக்கப்பட்டு, தேசிய ஷூறா சபையின் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டு, தேவையான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
தொடர்ச்சியாக வெவ்வேறு கருப்பொருட்களில், சமூகத்தில் உள்ள இன்னும் பல முக்கியஸ்தர்களையும் அழைத்து தொடர்ச்சியாக இவ்வாறன ஆலோசனை மன்றங்களை, தேசிய ஷூறா சபை எதிர்காலத்திலும் நடத்தவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :