அஸ்ரப் ஏ சமத்-
இலங்கையில் சிறுவர்கள் துஸ்பிரயோகத்துக்குள்ளாப்பட்ட சம்பவங்கள் கட்நத 4 வருட காலத்திற்குள் 210,000 (2 இலட்சத்து 10 ஆயிரம் முறைப்பாடுகள்) எமது ஒன் லைன் ஊடாக கிடைக்கப்பெற்றள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பபு அதிகார சபையின் தலைவி அனோமா திசாநாயக்க நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் அவற்றில் 25ஆயிரம் முறைப்பாடுகள் விசாரணைசெய்யப்பட்டு தீர்வுபெற்றுக்கொடுக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனையும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.
2013ஆம் ஆண்டில் 691 சிறுவர்களை பலவந்தமாக கொண்டுசென்று பாலியலுக்கு உள்ளாக்கப்பட்டு துஸ்பிரயோக சம்பவங்கள் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. மேலும் 681 முறைப்பாடுகள் சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.இந்த ஆண்டு 2014ல் ஜனவரி – ஜூன் மாதம் வரையில் 228 சிறுவர்கள் பலவந்தமாக பாலியலுக்கு உள்ளாக்கப்பட்டு துஸ்பிரயோக சம்பவங்களும் 259 சிறுவர்கள் துஸ்பிரயோக சம்பவங்களும் எமது அதிகார சபையிற்கு முறைப்பாடுகள் கிடைத்தவண்னம் உள்ளன.
கடந்த 4 வருட காலத்தில் 12 ஆயிரம் முறைப்பாடுகள் சிறுவர் பொலிஸ் பாதுகாப்பு பிரிவின் உதவியுடன் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றோம். எங்களுக்கு ஒன் லைன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ எழுத்துமூலம் கிடைக்கும் தகவல்களைக் கொண்டும் 48 மணித்தியாலத்துக்குள் பொலிசார் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இதனை விட சோசியல் மீடியாக்கள் ஊடாக சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கும் 300 பேர் அடையாலம் கண்டுள்ளோம். அதில் 30 பேருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொணடு வருகின்றோம். 7 பேரை பொலிசார் உதவியுடன் கைது செய்துள்ளோம் .மேலும் 30 பேர் பற்றி விசாரணைகளை மேற்கொண்டு அவர்களையும் கைது செய்ய உள்ளோம். சோசியல் மீடியாக்கள் ஊடாக சிறுவர்களுக்கு பாலியல் தூண்டும் படங்கள் காட்சிகள், சம்பவங்களை பேசிஸ்புக், இண்டநெட், வெப்தளம், ருவிட்டர் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களை “சைபர் வோச் அட்டாச்” ஊடாகவே கண்டு பிடிக்கின்றோம். இத்திட்டத்திற்கு சர்வதேச தொழிற்சங்க நிறுவனம் எமது அதிகார சபைக்கு நிதி வழங்கியுள்ளது. இதனை கண்கானிக்க ஒரு பிரிவு உள்ளது. என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி அனோமா திசாநாயக்க தெரிவித்தார்.
.jpg)
0 comments :
Post a Comment