ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தவிசாளராகவிருந்து கடந்த வாரம் விலகிக் கொண்ட பொத்துவில் மஜீத் (முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்) அமைச்சர் அதாவுல்லாஹ்வின் தேசிய காங்கிரஸில் இணையும் சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் நோன்பின் பின்னர் அவர் அதிகாரபூர்வமாக கட்சிக்குள் உள்வாங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான இறுதிக் கட்ட பேச்சுவார்த்தைகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் கொழும்பில் இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொத்துவில் மஜீதை, பொத்துவில் மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களை மையப்படுத்தியும் முன்னாள் கல்முனை மாநகர சபை மேயரான சிராஸ் மீராசாகிபை கல்முனை, நிந்தவூர் பிரதேசங்களை மையப்படுத்தியும் களமிறக்கவும் வியூகங்களை தேசிய காங்கிரஸ் உயர்மட்டம் முன்னெடுத்துள்ளமையும் தெரிய வருகிறது.
-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

0 comments :
Post a Comment