எஸ்.அஷ்ரப்கான்-
கிழக்கு மாகாணத்தில் பிரசித்தி பெற்ற சாய்ந்தமருது முபாறக் டெக்ஸ்டைல்ஸ் ஆடையகத்தின் கிளை நிறுவனம் ஒன்று மட்டக்களப்பு சென் அந்தோனியார் வீதியில் நேற்று (18) வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இப்புதிய நவீன காட்சியறை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம். அப்துல்லாஹ் மற்றும் உரிமையாளர்களான ஆதம்பாவா மீராசாஹிப், ஏ.வி.எம். முபாறக் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். உதயகுமார், கிழக்கு மாகாண உள்நாட்டு இறைவரித்திணைக்கள பணிப்பாளர் எம். கணேசராஜா, சிவில் சமூகத்தலைவர் எஸ்.மாமாங்கராஜா மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
ஆரம்ப வர்த்தக நடவடிக்கையை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம். அப்துல்லாஹ் கொள்வனவு செய்து ஆரம்பித்துவைத்தார்.
.jpg)



0 comments :
Post a Comment