அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் பசிபிக் கடல் கடல் பகுதியில் அலெசியன் தீவுகள் உள்ளது. அங்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோவில் இந்த நிலநடுக்கம் 8 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தை அடுத்து அங்கு. வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் அச்சம் அடைந்த பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கம் அலெசியன் தீவுகளில் உள்ள லிட்டில் சிட்கின் தீவின் தென்கிழக்கில் 23 கிலோ மீட்டர் தொலைவில் 114 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தை அடுத்து அங்கு வழக்கத்திற்கு மாறாக பசிபிக் கடலில் கடல் அலைகள் உயரமாக எழும்பின. இதைத்தொடர்ந்து அமெரிக்கா மற்றும் கனடாவின் பசிப் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை. இதற்கிடையே சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு இந்தோனேசியாவில் 9.3 ரிக்டர் அளவுகொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட சுனாமி அலைகளால் 240,000 மக்கள் பலியாகினார்.
இதேபோல், நியூசிலாந்தில் உள்ள கெர்மாடிக் தீவில் காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.2 புள்ளிகளாக நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. ஆனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. ரவுல் தீவின் தென்கிழக்கு பகுதியில் இருந்து 126 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை.

0 comments :
Post a Comment