அமைச்சர் விமல் வீரவன்ச அமைச்சரவை கூட்டத்திற்குச் செல்லாமைக்கு ஜனாதிபதி சாடல்

அஸ்ரப் ஏ சமத்-

டந்த ஒன்றறை மாத காலமாக அமைச்சர் விமல் வீரவன்ச அமைச்சரவை கூட்டத்திற்குச் செல்லாமல் இருப்பதையிட்டு ஜனாதிபதி கடந்த வார அமைச்சரவையின் போது அமைச்சர் விமல் வீரவன்சவை சாடியுள்ளதாக சிங்கள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

என்னதான் பிரச்சினைகள் இருந்தாலும் அதனை வாராந்தம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில எண்னிடம் பேசுவதையிட்டு வெளியில் அரசையும் அரசின் அதிகாரிகளை காரசாரமாக விமர்சிப்பதனையிட்டு ஜனாதிபதி வருத்தம் தெரிவித்துள்ளார்.

அமைசச்ர் விமல் வீரவன்ச கடந்த ஞயிறு லங்கா தீப பத்திரிகையின் நேர்காணலின்போது – அரசை காரசாரமாக சாடியது மட்டுமல்லாமல் எனது கட்சியில் உள்ள மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி உறுப்பிணர்களை ஸ்ரீ.ல.சு. கட்சிக்கு ஈர்ந்து அழைத்துச் செல்லும் வேலையை பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்சவே செய்கின்றார் என பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இன்று அமைச்சர் விமல் வீரவன்சவினதும் அவரது மணைவியினதும் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கான பணம் வைப்பில்யிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி ஊடாக பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளது.

வீடமைப்பு அமைச்சின் கீழ் இருந்த நகர வீடமைப்பு நிறுவனமும், வீடமைப்புக் கடன்கள் வழங்கும் நிறுவனம் இரண்டையும் அரசு அமைச்சர் விமல் வீரவன்சவிடம் கலந்து ஆலோசிக்காமல் மீளப்பெற்றுள்ளதாகவும். அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் கடுவலையில் உப மேயராக அமைச்சர் வீமல் விரவன்சவின் கட்சியின் உறுப்பினர் ஒருவர் உள்ளார். ஆனால் கடுவலை மாநகர சபை கடந்த வருடம் கடுவலை பிரதேச சபை அபிவிருத்தி ஒருங்கினைப்புக் குழு தலைவராக அமைசச்ர் விமல் அப் பதவிக்கு எதிராக பிரேரனை ஒன்றைக் கொண்டு வந்து அப் பதவியை அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவுக்கு வழங்கம்படி தீர்மாணம் நிறைவேற்றியுள்ளது.

ஆனால் அமைச்சர் விமல் வீரவன்சவின் கட்சியிலிருந்து 53 பேர் அந்த அமைச்சின் கீழ் உள்ள நிறுவணங்கள் மற்றும் சபைகளில் தலைவாகள், பணிப்பாளர்கள், உப தலைவாகள், ஆலோசகர்கள்; இணைப்பாளர்கள் என பதவி வகிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :