மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலய கணித, விஞ்ஞானப்பிரிவுகளுக்கான மாதாந்த நிதி கையளிப்பு

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையான மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் 1000 பாடசாலை திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட கணித, விஞ்ஞானப்பிரிவுகளில் க.பொ.த. உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக BCAS CAMPS கல்வி நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளரும், பொறியியலாளருமான கௌரவ. எம்.எம். அப்துல் ரஹ்மான் அவர்களிடம் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் உறுப்பினர்கள் சந்தித்து முன்வைத்த கோரிக்கைக்கமைவாக தனது சொந்த நிதியிலிருந்து குறிப்பிட்ட சிறு தொகை பணத்தினை மாதாந்த சந்தாவாக வழங்க முன்வந்ததற்கமைவாக.

2014.06.07 சனிக்கிழமை மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் அதிபரும், மீராவோடை கல்வி அபிவிருத்தி வட்டத்தின் தலைவருமான ஜனாப் ஏ.எம். அன்வர் (ஆசிரியர்), பிரதி அதிபர் எம்.எல். சபூர் (ஆசிரியர்) அவர்களிடம் அல்-கிம்மா சமூகசேவைகள் நிறுவனத்தின் செயலாளரும் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் ஆலோசகருமான ஜனாப். ஐ.எம். றிஸ்வின், கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் செயலாளர் எம்.ரீ. ஹைதர் அலி மற்றும் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் நிருவாக சபை உறுப்பினரும், ஊடகப்பிரிவு தலைவருமான ஐ.எம். சபான் ஆகியோரினால் மாதாந்த நிதி கையளிக்கப்பட்டது.

KCDA
ஊடகப்பிரிவு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :