எம்.பைஷல் இஸ்மாயில்-
2014 ஆம் ஆண்டு திறமைக்கான தேடல் விருது விழாவும் மருதூர் அன்ஸாரின் மனிதம் திரைப்பட இருவெட்டு வெளியீடும், முபாறக் அப்துல் மஜீத் எழுதிய இலங்கையின் இஸ்லாமிய இயக்கங்கள் என்ற நூல் வெளியீடும் மனிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் தலைமையில் இன்று (07) மாலை 5.00 மணியளவில் கல்முனை சாஹிராக் கல்லூரி காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஊடகவியலாளர்களான அஸ்லம் மௌலானா, எம்.ஏ.றமீஸ், எம்.எப்.நவாஸ், மனிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் ஆகியோர்களுக்கு திறமைக்கான தேடல் விருது, மருதூர் அன்ஸாரின் மனிதம் திரைப்பட இருவெட்டு மற்றும் முபாறக் அப்துல் மஜீத் எழுதிய இலங்கையின் இஸ்லாமிய இயக்கங்கள் என்ற நூல் ஆகியவற்றை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸிருக்கு ஏ.எல்.அன்சார் பதக்கம் அணிவித்து கௌரவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment