முஸ்­லிம்கள் மீதான தாக்­கு­த­லுக்கு எம் ­மீது குற்றம் சாட்­டு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது: ஆதா­ரத்­துடன் காட்­டுங்கள்

முஸ்­லிம்கள் மீதான தாக்­கு­த­லுக்கு எம்­மீது குற்றம் சாட்­டு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. எம்­மீ­தான குற்றச் சாட்­டுக்­களை ஆதா­ரத்­துடன் நிரூ­பித்து காட்­டுங்கள் என்று பொது­பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார். தீவி­ர­வா­தி­களின் செயற்­பா­டு­களால் பொது மக்­களின் சொத்­துக்கள் நாசப்­ப­டுத்தப்படுவது கண்­டிக்­கத்­தக்க விடயம் எனவும் அவர் கூறினார்.

அளுத்­கம சம்­பவம் மற்றும் அதன் பின்னர் இடம்­பெற்ற சில தாக்­குதல் சம்­ப­வங்­களில் பொது­பல சேனா பௌத்த அமைப்­பிற்கு தொடர்­புள்­ள­தென முஸ்லிம் கட்­சிகள் அமைப்­புகள் மற்றும் அமைச்­சர்கள் சிலர் குற்றம் சுமத்­தி­யுள்ள நிலையில் அது தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;

அளுத்­கம சம்­ப­வத்­திற்கும் எமது அமைப்­பிற்கும் எவ்­வித தொடர்பும் இல்­லை­யென ஆரம்­பத்தில் இருந்தே கூறி வரு­கின்றோம். எனினும் எம்­மீது பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி எம்மை இழி­வு­ப­டுத்தும் செயலை எவரும் செய்ய வேண்டாம். முஸ்லிம் மத தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக நாம் குரல் கொடுக்­கின்­ற­மை­யினால் பொது­ப­ல­சேனா அமைப்பு இன­வாத அமைப்­பா­காது. இன்றும் பல இஸ்­லா­மிய மதத்­த­வர்கள் எமது உத­வி­களை நாடியும் எமது பாது­காப்­பினை கேட்டும் வரு­கின்­றனர். அவர்­க­ளுக்கு எவ்­வித தயக்­கமும் இன்றி நாம் உதவி செய்­கின்றோம்.

நாட்டில் சிங்­கள பௌத்த மக்கள் எவ்­வாறு உரி­மை­களை அனு­ப­விக்க முடி­யுமோ அதே உரி­மை­களும் சுதந்­தி­ரமும் தமிழ் முஸ்லிம் மக்­க­ளுக்கும் உண்டு. எனினும் முஸ்லிம் மத வாதத்­தி­னையும் தீவிர வாதத்­தி­னையும் பரப்பி சிங்­கள தமிழ் இனத்தை அழிக்கும் தீவி­ர­வாத செய­லுக்கு நாம் ஒரு போதும் இட­ம­ளிக்­க­மாட்டோம். அதேபோல் அளுத்­கம சம்­ப­வத்தில் பொது­ப­ல­சேனா அமைப்­பினர் தொடர்பு பட்­டுள்­ளனர் என்றால் அதனை ஆதா­ரங்­க­ளுடன் நிரூ­பித்து காட்ட வேண்டும். முஸ்லிம் கட்­சி­களும் ஊட­கங்­களும் எம்மை சாடு­வ­தனால் சிங்­கள பௌத்த மக்கள் எம்மை நிரா­க­ரிக்­கப்­போ­வ­தில்லை மத்­திய கிழக்கில் சென்று தீவி­ர­வாத தலை­வர்­களை சந்­தித்து முஸ்லிம் தீவி­ர­வாதக் கொள்­கை­களை இலங்­கைக்குள் பரப்­பி­யது இந்த முஸ்லிம் கட்­சி­க­ளி­னதும் அமைப்­புக்­க­ளி­னதும் தலை­வர்­க­ளே­யாவர். முதலில் அவர்­களை அர­சாங்கம் தண்­டிக்­காது எம்மை சாடு­வதை நாம் கண்­டிக்­கின்றோம்.

முஸ்லிம் தீவி­ர­வாத செயற்­பா­டுகள் அதி­க­ளவில் பரப்­பப்­பட்டு வரு­கின்­றது. அப்­பாவி முஸ்லிம் மக்­களை மத தீவி­ர­வா­தத்­திற்குள் உட்­ப­டுத்தி நாட்­டிற்கு எதி­ராக ஏவி விடும் செயலை முஸ்லிம் அமைப்­புக்கள் செய்­கின்­றன. இதுவே நாட்டில் இனக் கலவரம் ஏற்படவும் மோதல்கள் உருவாகவும் காரணமாகவும் அமைந்துள்ளது. தீவிரவாதிகளின் வன்முறைகளினால் அப்பாவி பொது மக்களின் சொத்துக்கள் சேதமாகின்றது. அதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :