மட்டக்களப்பில் சிசுவின் சடலம் -படங்கள் இணைப்பு



என்.குகதர்சன்-
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுங்காங்கேணி கிராமத்திலுள்ள தாமரைக்குளக் கரையிலிருந்து சிசுவொன்றின் சடலத்தை செவ்வாய்க்கிழமை (24) காலை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


ஏதோவொன்றை நாயொன்று உட்கொள்வதைக் கண்ட பொதுமக்கள் சிலர், நாயை துரத்திவிட்டு பார்த்தபோது அது சிசுவின் சடலமென்பதை கண்டுள்ளனர். 

இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இச்சிசுவின் கால்துடைப் பகுதி சேதமடைந்த நிலையில் சடலத்தை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். 

சடலத்தை வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 



இச்சம்பவத்துடன் தொடர்புடைய கருதப்படுபவரை கைதுசெய்வதற்காக விரிவான விசாரனணகளை தாம் மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :