செல்போன் கதிர்வீச்சால் எந்த தீங்கும் வராது - நிபுணர்கள் விளக்கம்

மது அன்றாட வாழ்வியலில் ஒன்றாக பின்னிப்பிணைந்து விட்ட கைபேசிகளும், கைபேசி அலைவரிசையை கொண்டு சேர்க்கும் உயர் கோபுரங்களும் ‘எலெக்ட்ரோ மேக்னட்டிக் ஃபீல்ட்’ என்னும் கதிர்வீச்சினை அதிக அளவில் வெளியேற்றுகின்றன. 

இந்த கதிர்வீச்சானது மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது என்ற கருத்து நீண்ட காலமாகவே நிலவி வருகிறது. இந்த கருத்து தவறானது என்று இந்தியாவை சேர்ந்த கதிர்வீச்சியல் துறை நிபுணர்கள் தற்போது விளக்கம் அளித்துள்ளனர். 

இந்திய கதிர்வீச்சியல் துறை நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் பவின் ஜன்க்காரியா கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசுகையில் ‘புற்று நோயையும், செல்போன் கோபுரங்களில் இருந்து வரும் கதிர்வீச்சையும் சிலர் அடிப்படையே இல்லாமல் தொடர்புப்படுத்தியதால் மக்களிடையே இத்தகைய பீதி நிலவுகிறது. 

செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சால் மனிதர்களுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது என்று கண்டறியப்பட்டுள்ளது’ என தெரிவித்தார். 

இதே கருத்தை வலியுறுத்தி பேசிய இந்திய செல்போன் சேவையாளர்கள் சங்க இயக்குனர் ராஜன் மேத்யூஸ், ‘இது தொடர்பாக நடத்தப்பட்ட அறிவியல்பூர்வமான ஆய்வுகளில் இந்த கதிர்வீச்சினால் மனித ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாக நிரூபிக்கப்படவில்லை’ என்று கூறினார். 

அதிக உபயோகத்துக்கு ஏற்ப, இந்த கதிர்வீச்சினால் அப்பகுதியின் வெப்பநிலை மட்டுமே உயரும் என ரசாயன ஆய்வியல் துறை பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார். 

பொதுவாக, செல்போனால் புற்று நோய் உருவாகக் கூடும் என்ற கருத்தை முற்றிலுமாக மறுத்துள்ள கதிர்வீச்சு துறை சார்ந்த நிபுணர்கள், இந்த கதிர்வீச்சால் கர்ப்பிணி பெண்களுக்கும், அவர்களின் வயிற்றில் வளரும் கருவுக்கும் கூட எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :