வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு பாது­காப்பை அதி­க­ரிக்­க­வேண்டும் - அஸ்வர்

தெஹி­வ­ளைப்­ ப­கு­தியில் ஹபாயா, விற்­பனை நிலையம் தாக்­கப்­பட்ட சம்­ப­வத்தைக் கண்­டித்­துள்ள ஆளும் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம். அஸ்வர் இத்­த­கைய தாக்­கு­தல்கள் இடம்பெறு­வதை தடுப்ப­தற்கு பொலிஸார் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டு­மென்று கோரி­யுள்ளார்.

தெஹி­வளை – ஹில்­வீ­தியில் அமைந்­துள்ள ஹபாயா விற்­பனை நிலையம் மீது நேற்று முன்­தினம் அதி­காலை இனந்­தெ­ரி­யாத நபர்கள் கல்­வீச்சுத் தாக்­குதல் நடத்­தி­யி­ருந்­தனர்.

இந்தத் தாக்­கு­தலில் விற்­பனை நிலை­யத்தின் கண்­ணா­டிகள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. தாக்­கு­தலில் சேத­ம­டைந்த விற்­பனை நிலை­யத்தை நேற்று முன்­தினம் சென்று பார்­வை­யிட்ட அஸ்வர் எம்.பி. அங்­கி­ருந்து பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்க­கோ­னு­டனும்

பிரதி பொலிஸ் மா அதிபர் அனு­ர­ சே­ன­நா­யக்­க­வுடனும் தொலை­பே­சியில் தொடர்பு கொண்டுதெஹி­வ­ளையில் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான கடைகள், தாக்­கப்­பட்டு வரு­கின்ற சம்­ப­வங்கள் தொடர்பில் எடுத்­துக்­கூ­றி­யுள்ளார்.

அத்­துடன், இப்­ப­கு­தியில் ரோந்­துப்­ப­ணி­களை அதி­க­ரித்து வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு பாது­காப்பை அதி­க­ரிக்­க­வேண்டும். இத்­த­கைய தாக்­கு­தல்கள் முஸ்­லிம்கள் மத்­தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த அச்சத்தைப் போக்கவேண்டியது இன்றியமையாததாகும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :